விஜய்யின் ஷாஜஹான் படத்தை இயக்கியவர் என்ன ஆனார் தெரியுமா?
சென்னை: விஜய்யை வைத்து ஷாஜஹான் படத்தை இயக்கிய ரவி 15 ஆண்டுகள் கழித்து தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
2001ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் ஷாஜஹான். அந்த படத்தை ரவி என்பவர் இயக்கினார். ஷாஜஹானுக்கு பிறகு அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை.

15 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் படம் இயக்க வந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கேரளாவில் நடக்க உள்ளது. ரவி ஏன் 15 ஆண்டுகளாக எந்த படத்தையும் இயக்கவில்லை என்பது தெரியவில்லை.
ரவி புதுமுகங்களை வைத்து படம் எடுத்து வருகிறார். படத்திற்கு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா புகழ் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications