'மாஸ்டர்' சச்சின், 'மாப்பிள்ளை' தனுஷ், 'பிரின்ஸ்' மகேஷ் பாபுவுக்குள் என்ன ஒற்றுமை?
சென்னை: சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் தனுஷ், மகேஷ் பாபு மற்றும் சைப் அலி கான் ஆகியோருக்குள் ஒரு ஒற்றுமை உள்ளது.
ஆண்கள் பெரும்பாலும் தங்களை விட வயதில் சிறியவர்களையே மணப்பார்கள். இதற்கு விதவிலக்கான ஆண்களும் உண்டு. தன்னை விட வயதில் மூத்த பெண்களை மணப்பது பெரும்பாலும் காதல் திருமணத்தில் தான் நடக்கிறது. புகழ் பெற்ற பிரபலங்கள் அவ்வாறு வயதில் மூத்த பெண்களை மணந்துள்ளனர்.
அந்த பிரபலங்களில் சிலரைப் பார்க்கலாம்.

சச்சின் டெண்டுல்கர்
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 1995ம் ஆண்டு தனது 22வது வயதில் டாக்டரான அஞ்சலியை மணந்தார். அஞ்சலி சச்சினை விட 6 வயது மூத்தவர் ஆவார். அவர்களுக்கு சாரா என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர்.

தனுஷ்
நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்தார். அப்போது தனுஷுக்கு வயது 21, ஐஸ்வர்யாவுக்கு 22. அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர்.

'பிரின்ஸ்' மகேஷ் பாபு
தெலுங்கு திரையுலகில் பிரின்ஸ் என்று அழைக்கப்படும் மகேஷ் பாபு தன்னை விட 3 வயது அதிகமுள்ள நடிகையும், முன்னாள் மிஸ் இந்தியாவுமான நம்ரதா ஷிரோத்கரை 2005ம் ஆண்டு மணந்தார். அவர்களுக்கு கௌதம் கிருஷ்ணா என்ற மகனும், சித்தாரா என்ற மகளும் உள்ளனர்.

சைப் அலி கான்
பாலிவுட் நடிகர் சைப் அலி கான் தன்னைவிட 13 வயது அதிகமுள்ள நடிகை அம்ரிதா சிங்கை தனது 21வது வயதில் மணந்தார். அவர்களுக்கு சாரா அலி கான் என்ற மகளும், இப்ராஹிம் அலி கான் என்ற மகனும் உள்ளனர். இந்த தம்பதி கடந்த 2004ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். குழந்தைகள் தாயுடன் உள்ளனர். இந்நிலையில் சைப் அலி கான் நடிகை கரீனா கபூரை 2012ல் மணந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











