twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘காலா’ பேசும் அரசியல்... ரஜினிக்கா? மக்களுக்கா?

    காலா படத்தில் பேசப்பட்டுள்ள அரசியல் யாருக்காக என்ற கேள்வி எழுந்துள்ளது.

    |

    சென்னை: ரஜினியின் காலா திரைப்படத்தில் பேசப்பட்டுள்ள அரசியல் அவரது அரசியல் வாழ்க்கைக்கு பயன்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ரஜினியின் அரசியல் நுழைவைத் தொடர்ந்து, வெளிவரும் படம் என்பதால், காலாவுக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

    ரஜினியின் அரசியல் வாழ்க்கைக்கு காலா படம் வலுவான அடிதளத்தை ஏற்படுத்திக் கொடுக்குமா? அல்லது, வழக்கம் போல் இதுவும் ஒரு சாதாரண சினிமாவாக கடந்து போய் விடுமா என்ற கேள்வியோடு பலரும் காத்திருக்கின்றனர்.

    Whats the political message Kaala gives?

    காலா சொல்லும் செய்தி...

    படத்தின் முதல் காட்சியே, உழைக்கும் மக்களை பற்றி தான் பேசுகிறது. ஒரு நகரத்தை கட்டமைக்க சேரிகளில் வாழும் மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் அவர்களின் உழைப்பை உறிஞ்சும் அரசு இயந்திரம், 'தூய்மையான நகரம்', 'சிங்கார நகரம்', 'எழிழ்மிகு மாநகர்'என்ற வார்த்தைகளைக் கூறி, வாழும் இடங்களில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தி, நகரத்தில் இருந்து பிரித்தாளும் உத்தியை கையாளுகின்றன.

    அதே நேரத்தில், அதுபோன்று வேறு பகுதிகளில் இடமாற்றம் செய்யப்படும் குப்பத்து வாசிகள், குற்றவாளிகளாக முத்திரை குத்தப்படுகின்றனர். அடிப்படை வசதிகளின்றி, கல்வி, வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், 60 சதவீதக்கும் அதிகமான மக்கள் சொந்த நிலமின்றி தவிக்கிறார்கள். ஏன் இந்த நிலை? இதைத்தான் வலுவாக பேசுகிறது 'காலா'.

    மெரினா புரட்சி

    ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் கூடிய இளைஞர்களுக்கு தமிழக மக்கள் அனைவரும் ஒருமித்த ஆதரவு தந்து, அந்த போராட்டத்தை வெற்றி பெற வைத்த வரலாற்று சம்பவத்தை, படத்தின் மைய புள்ளியாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். ஆனால் அந்த போராட்டம் கடைசி நேரத்தில் எப்படி திசைமாற்றப்பட்டது என்பதையும் அழுத்தமாக கூறியிருக்கிறார்.
    'நிலம் எங்கள் உரிமை' என்ற பாட்டாளி மக்களின் கோரிக்கைக்கு ரஜினியின் மாஸ் இமேஜை பயன்படுத்தி இருக்கிறார் பா.ரஞ்சித்.

    ரஜினிக்கு உதவுமா?

    படம் முழுவதும் பாட்டாளி மக்களின் நிலப் பிரச்சினையையே பேசுகிறார் இயக்குனார். 'நிலம் உங்களுக்கு அதிகாராம். ஆனால் எங்களுக்கு அது தான் வாழ்க்கை', 'என்னை மீறி தாராவியில் இருந்து ஒருபிடி மண்ணைக்கு கூட உன்னால் எடுத்துட்டு போக முடியாது', 'கருப்பு உழைப்பின் வண்ணம்' இப்படியான வசனங்கள் ரஜினிக்கு நிறைய உண்டு.

    உழைக்கும் மக்களுக்காக படம் முழுவதும் போராடி, ஆளும் வர்க்கத்த்தின் பகைக்கு ஆளாகிறார் சூப்பர் ஸ்டார். தமது இமேஜை பற்றிக் கூட கவலைபடாமல், மக்களுக்காக அடி வாங்குகிறார், வில்லனிடம் தோற்கிறார், மனைவியையும் மகனையும் இழக்கிறார்.

    இத்தனை இழப்பிற்கும், தியாகத்திற்கும் பிறகும் கூட உற்சாகம் குறையாமல் அதிகார வர்க்கத்திற்கு எதிராக போராட்டத்தை தொடர்கிறார். பட்டாளி மக்களை கவரும் இப்படியான காட்சிகள் படத்தில் நிறைய இருக்கின்றன.

    இதுபோல இந்து - முஸ்லிம் ஒற்றுமையை பற்றியும் படம் பேசுகிறது. படத்தில் இஸ்லாமிய மக்களின் நெருங்கிய தோழனாக தன்னை காட்டிக் கொள்கிறார் ரஜினி.
    ஆனால் இதெல்லாம் ரஜினியின் அரசியல் வாழ்க்கைக்கு வலு சேர்க்குமா? எனக் கேட்டால், அது சந்தேகமே.

    தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நடிகராக வலம் வரும் ரஜினி, முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி, தன்னை ஒரு ஆபத்பாந்தவனாக, ஏழைகளின் ரட்சகராக காட்டும் படங்களை கொடுத்தால், அரசியல் வாழ்க்கைக்கு வலுசேர்க்க முடியும் என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.
    செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா ரஜினி?

    English summary
    A debate has started that will the Kaala movie help Rajini to build a strong platform in his political career.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X