கமல், தல, விக்ரம் கெட்ட வார்த்தை பேசலாம், ஆனால் ஜோதிகா பேசக் கூடாதா? #Nachiyaar

By Siva

Recommended Video

கமல், தல, விக்ரம் கெட்ட வார்த்தை பேசலாம், ஆனால் ஜோதிகா பேசக் கூடாதா?- வீடியோ

சென்னை: ஹீரோ கெட்ட வார்த்தை பேசலாம் ஆனால் ஹீரோயின் பேசினால் அது உலக மகா குத்தமா?

நாச்சியார் பட டீஸரில் ஜோதிகா தே.ப. என்கிற கெட்ட வார்த்தையை பேசியுள்ளார். ஜோதிகா எப்படி அந்த வார்த்தையை பேசலாம் என்று ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள்.

ஏன் ஹீரோ கெட்ட வார்த்தை பேசும்போது ஹீரோயின் பேசக் கூடாதா?

டீஸர்

டீஸர்

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்டச்சிரம் டீஸரில் சீயான் ஜோதிகா பேசிய வார்த்தையை மெட்ராஸ் பாஷையில் கூறினார். அதை யாருமே கண்டுக்கவே இல்லையே.

கமல் ஹாஸன்

கமல் ஹாஸன்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான நாயகன் படத்தில் உலக நாயகன் கமல் ஹாஸனும் கூடத் தான் ஜோதிகா சொன்ன அதே கெட்ட வார்த்தையை பேசினார். அதுக்கு எல்லாம் யாரும் குதிக்கலையே.

அஜீத்

அஜீத்

மங்காத்தா படத்தில் தல அஜீத் ராய் லட்சுமியை பார்த்து தே. மு. என்ற வார்த்தையை சொன்னார். அவர் பேசிய போது ரசிகர்கள் கை தட்டினார்களே தவிர யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

 அருண் விஜய்

அருண் விஜய்

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் சத்யதேவ் ஐபிஎஸ்ஸாக நடித்த என்னை அறிந்தால் படத்தில் தல அருண் விஜய்யுடன் சண்டை போடும்போது லெக்சரா கொடுக்கிற என்று கூறி ஒரு கெட்ட வார்த்தை பேசினார்.

இன்ட்ரோ

இன்ட்ரோ

கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் வில்லன்கள் இடத்திற்கு சென்று கண்ணை தோண்டுடா என்று சொல்லும்போது கெட்ட வார்த்தை பேசினார்.

 கார்த்தி

கார்த்தி

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இன்ட்ரோ காட்சியிலேயே கார்த்தி கெட்ட வார்த்தை பேசியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன தப்பு?

என்ன தப்பு?

சினிமா படங்களில் இதுவரைக்கும் யாருமே பேசாத கெட்ட வார்த்தையை ஜோதிகா மட்டும் பேசிவிட்டது போன்று போர்க்கொடி தூக்குகிறார்கள். ஜோதிகாவை அவரது குழந்தைகளின் பெயரை வைத்து மீம்ஸ் போட்டு அசிங்கப்படுத்துகிறார்கள். ஆணுக்கு ஒரு நியாயம், பொண்ணுக்கு ஒரு நியாயமா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X