இந்த தமிழ் ஹிட் படத்தில் நடித்தாரா சாய் பல்லவி... யாராச்சும் கவனிச்சீங்களா ?
சென்னை : 2015 ல் மலையாளத்தில் ரிலீசாகி, மெகாஹிட் ஆன படம் பிரேமம். இந்த படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் சாய் பல்லவி முதல் முறையாக அறிமுகமானார். பிறகு பிரேமம் படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
மலையாள டைரக்டர் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படத்தில் நிவின் பாலி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்திருந்தனர். ஜார்ஜ் என்ற இளைஞரின் வாழ்க்கையில் வரும் 3 விதமான காதல் சம்பவங்களை பற்றியது தான் படத்தின் கதை.

மலர் டீச்சராக வந்த சாய் பல்லவி
மலையாளத்தில் எடுக்கப்பட்ட பிரேமம் படத்தில் தமிழ் பேசும், மலர் டீச்சராக அறிமுகமான சாய் பல்லவி, பிறகு தமிழில் தனுஷுடன் மாரி 2, ஏஎல் விஜய் இயக்கிய கரு, சூர்யா நடித்த என்ஜிகே உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தமிழ் படத்தில் தான் அறிமுகம்
ஆனால் சாய் பல்லவி அறிமுகமான படம் பிரேமம் இல்லையாம். 2008 ல் தமிழில் வெளிவந்து, ஹிட்டான படத்தில் தான் சாய் பல்லவி முதல் முறையாக நடிகையாக அறிமுகமாகி உள்ளார் என்ற உண்மை தற்போது தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் கங்கனாவின் தோழியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

வைரலாகும் சாய்பல்லவி ஃபோட்டோஸ்
2008 ல் ஜெயம் ரவி, கங்கனா ரணாவத் நடித்து வெளிவந்த தாம்தூம் படத்தில் சாய் பல்லவி சில காட்சிகளில் நடித்துள்ளார். ஜீவா டைரக்ட் செய்த இந்த படத்தில் சாய் பல்லவி நடித்த காட்சிகளின் ஃபோட்டோக்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Recommended Video

ஜீவாவின் மரணத்திற்கு பின் ரிலீஸ்
தாம் தூம் படத்தை இயக்கிக் கொண்டிருந்த போதே டைரக்டர் ஜீவா உயிரிழந்தார். அதற்கு பிறகு அவரது மனைவி அனிஷா, மணிகண்டன், பிசி ஸ்ரீராம் ஆகியோர் இணைந்து இந்த படத்தை முடித்து, ரிலீஸ் செய்தனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

தற்போது பிஸியான சாய் பல்லவி
தற்போது சாய் பல்லவி பல படங்களில் ஒப்பந்தமாகி படுபிஸியான ஹீரோயினாக இருந்து வருகிறார். ரானா டகுபதியுடன் விராட பர்வம், நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











