“6 மணிக்குப் பிறகு விஜய் இப்படியா?”.. ஷோபா சொன்ன விஷயம் வைரல்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக மாறுவதற்கு விஜய்க்கு இன்னும் மூன்று எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. விசிகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் தங்களது ஆதரவை தெரிவித்துவிட்டதாகவும்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என தெரிகிறது. ஆகமொத்தம் அடுத்த ஐந்து ஆண்டுகள் விஜய்யின் ஆட்சி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதன் காரணமாக தவெகவினர் தங்களது மகிழ்ச்சியை மாநிலம் முழுவதும் வெளிப்படுத்திவருகிறார்கள்.

கட்சி ஆரம்பித்த சில வருடங்களிலேயே முதல் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தார் விஜய். மக்களவைத் தேர்தலை அவர் தவிர்த்துவிட்டு, சட்டப்பேரவைத் தேர்தலில் கவனம் செலுத்தபோவதாக தவெக முடிவெடுத்தபோது எல்லோருமே கிண்டல் செய்தார்கள். கட்சி ஆரம்பித்தவுடனேயே விடுமுறை எடுத்துவிட்டார் என கேலி செய்தார்கள். ஆனால் தேர்தல் முடிவுகளை பார்க்கையில் தவெக அனைத்தையும் செம பிளான் செய்திருப்பது உண்மைதான் என்று ஒருதரப்பினருக்கு தோன்றுகிறது. மொத்தம் 108 தொகுதிகளை வென்றிருக்கிறது தவெக.

What Shoba Said About Vijay Is Going Viral Now
Photo Credit:

விரைவில் ஜோசப் விஜய் எனும் நான்: பெரும்பான்மைக்கு 118 தேவை என்பதால் அதிமுக, காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகளிடம் ஆதரவு கேட்டது தவெக. இவற்றில் காங்கிரஸும், இந்திய கம்யூனிஸ்ட்டும் ஆதரவை கொடுத்திருப்பதால் மொத்தம் இப்போதைக்கு 115 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது. விரைவில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொடுத்திருக்கும் ஆதரவும் அதிகாரப்பூர்வமாக தெரியப்போகிறது. ஆகமொத்தம், 'சி.ஜோசப் விஜய் எனும் நான்' என விஜய் சொல்லப்போகும் நாட்கள் தொலைவில் இல்லை.

எழுந்த விமர்சனங்கள்: விஜய் சுற்றி ஏகப்பட்ட பிரளயங்களே எழுந்தாலும் அமைதியாகத்தான் இருப்பார் என்பது மீண்டும் நிரூபனமாகியிருக்கிறது. எத்தனையோ விமர்சனங்கள் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வந்தாலும் அசையாமல் தான் நினைத்த இடத்தை அடைவதற்கான பயணத்தில்தான் இருப்பார் என்பதை மீண்டும் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் பார்த்தார்கள். முக்கியமாக விஜய்யை சுற்றி சங்கீதா பிரச்னையும், திரிஷா வதந்தியும் உருவானபோது தேர்தலில் தவெகவால் ஒரு இடத்தைகூட பிடிக்க முடியாது என்றுதான் எல்லோருமே நினைத்தார்கள்.

Also Read
ஆட்சியமைப்பதில் சொதப்பும் விஜய் அண்ணா.. கிஃப்ட் கேட்டு டார்ச்சர் செய்யும் அண்ணி.. பறக்கும் மீம்ஸ்
ஆட்சியமைப்பதில் சொதப்பும் விஜய் அண்ணா.. கிஃப்ட் கேட்டு டார்ச்சர் செய்யும் அண்ணி.. பறக்கும் மீம்ஸ்

தேர்தலில் அதிசயம்: இருப்பினும் அந்த நினைப்புகளை எல்லாம் விஜய் என்ற ஒற்றை முகம்தான் உடைத்திருக்கிறது. பல தொகுதிகளில் தவெகவின் வேட்பாளர்கள் முகங்கள்கூட சிலருக்கு தெரியவில்லை. அவர்கள் சொல்வதெல்லாம், விஜய், விசில் ஆகிய இரண்டு விஷயங்களுக்கு மட்டுமே என்னுடைய வாக்கை செலுத்தியிருக்கிறேன் என்கிறார்கள். இப்படி கண்மூடித்தனமாக விஜய் மீது நம்பிக்கை வைத்து முதலமைச்சர் என்ற பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள். இதை ஒழுங்காக செய்து தன்னை அரசியல் களத்தில் தக்க வைப்பாரா? வேறு வழியில்லை தக்க வைத்துதான் ஆக வேண்டும். இல்லையெனில் காற்றில் பறக்கும் பறவையாக இல்லாமல் பேப்பராக இருப்பார் என்பது உறுதி.

ஷோபா பேட்டி: விஜய் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் முதன்மையானது அவர் ஆறு மணிக்கு மேல் ஒரு மாதிரி இருப்பார் என்பதுதான். அதனை தவெகவினர் நம்புவதில்லை. இந்நிலையில் விஜய்யின் அம்மா ஷோபா கொடுத்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில், "விஜய் முதலில் இருந்தே அவர் அப்பாவுடைய ட்ரெய்னிங்தான். காலை 9லிருந்து மாலை ஆறு மணி வரை அல்லது காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரைதான் ஷூட்டிங் செல்வார். ரொம்பவே அவசியம் என்றால்தான் நைட் ஷூட்டுக்கு செல்வார். நைட் ஷூட்டுக்கு சென்றால் பகலில் வீட்டில்தான் இருப்பார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X