கோரிக்கை வைத்த ரசிகர்கள்... வெளியானது அந்த வீடியோ.. வீட்டுக்குள் என்ன செய்கிறார் மாநாடு சிம்பு?
சென்னை: கொரோனாவால் ஊரடங்கு நீட்டுக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் சிம்பு, வீட்டுக்குள் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
Recommended Video
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இதற்கு பலியாகியுள்ளனர்.
இதைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

பரவும் கொரோனா
இருந்தும் இந்த வைரஸ் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு பரவி வருகிறது. இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் இதற்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்தைத் தாண்டியுள்ளது.

தமிழகத்தில்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று வரை அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
சிம்பு ரசிகர்கள்
இந்நிலையில், லாக்டவுன் காரணமாக, தாங்கள் என்ன செய்கிறோம் என்று நடிகர், நடிகைகள் சிலர் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையே, நடிகர் சிம்பு என்ன செய்கிறார் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத் தளங்களில் கேட்டுவந்தனர். இதையடுத்து அவர் என்ன செய்கிறார் என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

ஒர்க் அவுட் வீடியோ
அந்த வீடியோவில் சிம்பு ஒர்க் அவுட் செய்கிறார். இந்த வீடியோ நேற்று இரவு வெளியானது. அதில், நடிகர் வீட்டுக்குள்ளேயே ஓடி வருகிறார். இந்த வீடியோவை சிம்பு ரசிகர்கள் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து #SilambarasanTR என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இதை ரசிகர்கள் டிரெண்டாக்கினர். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

மாநாடு
சிம்பு இப்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகரன், மனோஜ், டேனியல், பிரேம்ஜி, கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர். சிம்பு, அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்குகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.


Click it and Unblock the Notifications











