என்ன சொல்றீங்க.. அந்த 4 பேரும் ரஜினிக்கு ஜோடி இல்லையா? லீக்கானதா அண்ணாத்த படத்தின் கதை?

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் கதை லீக்கானது என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் வைரலாக ஒரு கதை பரவி வருகிறது.

Recommended Video

அட கருமமே.. இதுக்கு டிரெஸ் போடாமலே இருந்திருக்கலாமே.. எல்லாமே தெரியுதே.. ஊர்வசியின் ஹாட் வீடியோ!

ரஜினிகாந்தின் தனிப்பட்ட வாழ்க்கை என்றாலும், சினிமா வாழ்க்கை என்றாலும், அவர் குறித்த செய்திகள் தீயாய் பரவுவது வழக்கம்.

லம்போர்கினியில் காரில் பறந்தார் என்ற செய்தி வைரலான நிலையில், அவர் இ-பாஸ் பெற்றாரா என்ற சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தது.

தீயாய் பரவும்

தீயாய் பரவும்

சீட் பெல்ட் அணிந்தாரா? இல்லையா? என ஏகப்பட்ட விஷயங்கள் பரவின. சில தினங்களுக்கு முன்பாக, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்திருந்தார். பின்னர், அதன் ஆடியோ லீக்கானது, அதற்காக இயக்குநர் அடைந்த வருத்தம் என எல்லாமே தீயாய் பரவின.

வதந்திகள்

வதந்திகள்

அது மட்டுமின்றி, அண்ணாத்த படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய முழு சம்பளத் தொகையையும் தயாரிப்பாளருக்கு திருப்பி அளித்து விட்டார் என்றும், அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் டிராப் செய்து விட்டதாகவும் கூட வதந்திகள் வலம் வரத் தொடங்கின. இந்நிலையில், அண்ணாத்த படத்தின் கதை இதுதான் என்கிற தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

இதுதான் கதையா?

இதுதான் கதையா?

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில், ரஜினியின் அத்தை மகள்களான குஷ்பு மற்றும் மீனா ஆகிய இருவரும் ரஜினிகாந்தை திருமணம் செய்து கொள்ள போட்டி போடுகின்றனர். ஆனால், இருவருக்கும் இடையே மனக் கஷ்டம் வரக் கூடாது என்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.

மகளாக கீர்த்தி சுரேஷ்

மகளாக கீர்த்தி சுரேஷ்

முன்னதாக ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த கதையில் ரஜினிக்கு மகளாக கீர்த்தி சுரேஷ் வருவதாகவும், ரஜினியைத் தான் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை அவரது மகள் கீர்த்தி சுரேஷை மருமகள் ஆக்கி விட வேண்டும் என குஷ்புவும் மீனாவும் மீண்டும் போட்டிப் போடுகின்றனர்.

நயன்தாரா

நயன்தாரா

இதற்கிடையே பிரகாஷ்ராஜ் மற்றும் வில்லன்கள் கொண்டு வரும் பிரச்சனையில், அண்ணாத்த சிக்கிக் கொள்ள அவரை காப்பாற்ற வக்கீலாக நடிகை நயன்தாரா வருவதாகவும், இறுதியில், கீர்த்தி சுரேஷுக்கு ஜோடி யார்? என்பதுமாக குடும்ப மசாலா கொண்ட காமெடி கமர்ஷியல் படமாக அண்ணாத்த உருவாகி உள்ளதாக அந்த கதை சொல்கிறது.

இதையெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு

இதையெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு

இப்படி வைரலாகும் அந்த கதையை படித்துப் பார்த்த சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் இதையெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு, இயக்குநர் சிவா இதை விட சூப்பரான கதையைத் தான் அண்ணாத்த படத்தில் கொடுப்பார் என்றும், விஸ்வாசம் படத்தை மிஞ்சும் அளவுக்கு ஃபேமிலி என்டர்டெயினராக அண்ணாத்த வரும் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

கடைக்குட்டி சிங்கம் படக் கதை

கடைக்குட்டி சிங்கம் படக் கதை

மேலும், சில ரசிகர்கள், இரண்டு அத்தை பொண்ணு, அவங்களுக்கு கஷ்டம் வரக் கூடாதுன்னு இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறாரு ரஜினிகாந்த், அட இது அண்ணாத்த படக் கதை இல்லப்பா அப்படியே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படக் கதை தான் என்றும் சில ரசிகர்கள் வைரலாகும் அந்த கதையை பங்கமாக கலாய்த்தும் வருகின்றனர்.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கே வரும் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் இந்த ஆண்டு இறுதி வரை ஷூட்டிங்கிற்கே செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது ரஜினி ரசிகர்களை ரொம்பவே வருத்தம் அடைய செய்துள்ளது. அடுத்த ஆண்டு சம்மருக்குத் தான் இந்த படம் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. எல்லாம் கொரோனா கையில் தான்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X