Malar serial இந்த பொண்ணுக்கு எதுக்கு இப்படி சோதனை வருது?

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியலில் ஏகத்துக்கும் அன்பை காண்பிக்கும் புருஷனை கல்யாணம் செய்த பின்பும் இப்படி சோதனை அவளைத் துரத்துகிறதே.

முதலில் தற்காப்புக்கு கொலை செய்த தான் எப்படி போலீஸ் அசிஸ்டென்ட் கமிஷனரை கல்யாணம் செய்வது என்கிற பயத்தில் இருந்தாள் மலர்.அந்த பயம் நீங்கி கல்யானமும் நடந்துருது.

முதலிரவு அன்னிக்கு தான் கொலை செய்த கேஸ் கணவனிடம் வந்த கதையை விவரம் தெரியாமல் சொல்லி மயங்கி விழ வைத்தான் கதிர். இன்னிக்கு என்னடான்னா விளக்கேத்த சொல்லி...

மலர் கதிர்

மலர் கதிர்

கதிருக்கு மனைவியாகும் முன்னரே மலர் மீது அவ்வளவு காதல். அந்த காதலை அவன் வெளிப்படுத்திய விதம், இப்படி தனக்கு ஒரு காதலர் கிடைக்க மாட்டானா எனும் அளவுக்கு இருந்தது. ஆனாலும், அதை என்ஜாய் செய்து ஏற்றுக் கொள்ள முடியாதபடி மலருக்கு சோதனை.அதாவது தற்காப்புக்காக மலர் ஒரு கொலை செய்து இருக்கிறாள்.இது அவளது தங்கை சுவாதிக்கு மட்டுமே தெரியும். இப்படி இருக்கையில், அசிஸ்டென்ட் கமிஷனரின் காதலை அவளால் எப்படி சந்தோஷமாக ஏத்துக்க முடியும்?

முதலிரவில் காதல்

முதலிரவில் காதல்

கதிர் ஓவர் பாசம், ஓவர் காதல் என்று மலரை கொஞ்சம் கொஞ்சமாக உருக வைத்து, கதிரைப் பார்த்து ஐ லவ் யூன்னு சொல்ல அவன் காத்திருக்க, கதிர் இவள் செய்த கொலைக் கேஸ் தன்னிடமே வந்தது பற்றி கூறி.,அ வளை மயங்கி விழ செய்துவிட்டான். அப்போதும் மலரை உள்ளங்கையில் வைத்து தாங்கிப் பார்த்துக் கொண்டானே தவிர, முதலிரவு நடக்கவில்லையே என்று கவலைப் படவில்லை.இப்போதும் இந்த பெண்ணுக்கு வந்தது சோதனைதான்.

விளக்கேற்ற வந்தால்

விளக்கேற்ற வந்தால்

புதுப்பெண் குளித்து முழுகி, விளக்கு ஏற்றலாம் என்று பூஜை அறைக்கு வந்தால்,அங்கு குத்து விளக்கு. அந்த குத்து விளக்கு மலர் எந்த கயவனை குத்து விளக்கால் அடித்து கொன்றாளோ அதே குத்து விளக்கு. அதை பார்த்து பயத்தில் வியர்த்துப் போகிறது மலருக்கு. அதில் வேற நம்மை வீட்டு குத்து விளக்குதான்மா ஏத்துன்னு அம்மா சொல்றாங்க. எப்படி வருது பாருங்க சோதனை.

ரொமான்ஸ் ஸ்கூட்டியில்

ரொமான்ஸ் ஸ்கூட்டியில்

மலரின் ஸ்கூட்டியை மலர் ஓட்ட பின்னால் அமர்ந்து கதிர் ஒரு ரைடு போறான். அப்போது, மெதுவாக கதிர் அவளது இடுப்பில் கை வைக்க, சிலிர்த்த அவள் அதை ரசிக்கிறாள்.பிறகு மெதுவாக அவளை நெருங்கி அமர்கிறான், கூந்தலை முகர்கிறான் இப்போது மலரின் மனதில் காதல் பூத்து இருக்கு.இந்த முறை என்னாகுமோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X