தல தோனிக்கு சேப்பாக்கம்.. தளபதி விஜய்க்கு மலேசியா ஸ்டேடியம்.. விஜய் எத்தனை மணிக்கு பேசப்போறாரு?
சென்னை: குறைந்தபட்சம் 50 ஆயிரம் செலவு செய்து பல ரசிகர்கள் தமிழ்நாட்டில் இருந்து மலேசியாவுக்குச் சென்று தளபதி கச்சேரி மற்றும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று வருகின்றனர். மலேசிய மக்களும் புக்கிட் ஜலில் மைதானத்தை நோக்கி சாரை சாரையாய் சென்று டிராபிக் ஜாம் செய்த காட்சிகள் வெளியான நிலையில், அர்ஜுனர் வில்லு பாடலுக்கு ஒட்டுமொத்த அரங்கமே வைப் செய்த காட்சிகளையும் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
கேவிஎன் மற்றும் மாலிக் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக மலேசியாவில் நடத்தி வருகின்றனர். நேரு ஸ்டேடியத்தில் நடந்திருந்தால் கூட இத்தனை ஆயிரம் ரசிகர்கள் கூடியிருக்க வாய்ப்பில்லை என்றும் சுமார் 80 ஆயிரம் ரசிகர்கள் ஒரே மைதானத்தில் தளபதி விஜய் என்கிற ஒற்றை ஆளுக்காக வந்து அன்பு காட்டி வருவதை பார்த்தாலே கூஸ்பம்ப்ஸ் ஆகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆடியோ லான்ச்சுக்கே இப்படி ரசிகர்கள் வெறித்தனமான அன்பை காட்டி வரும் நிலையில், வரும் பொங்கலுக்கு படம் வெளியாகும் போது ரசிகர்கள் காட்டப் போகும் அன்பை பார்த்து தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவும் ஆச்சர்யமடையும் என்கின்றனர்.
ரசிகர்களை கண்கலங்க வைத்த "யார் பெற்ற மகனோ": தொடர்ந்து பல ரீமேக் படங்களில் நடித்து வெற்றிக் கொடுத்து வந்த விஜய் பேரரசுடன் இணைந்து திருப்பாச்சி, சிவகாசி என ஒரிஜினல் படங்களை கொடுத்தார். அதே போல ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி, கத்தி போன்ற தரமான ஒரிஜினல் படங்களையும் கொடுத்தார். அதிலும், கத்தி படத்தின் கிளைமேக்ஸில் வரும் "யார் பெற்ற மகனே" பாடல் ரசிகர்களை அப்போதே உருக்கிய நிலையில், இன்று நடைபெற்ற தளபதி திருவிழாவில் விஜய் ஏசுதாஸ் அந்த பாடலை பாடி அரங்கில் இருந்த ரசிகர்களை கண்கலங்க வைத்து விட்டார்.
மலேசியா ஸ்டேடியமே அதிருது: தல தோனிக்கு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் எப்படி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்றுக்கூடி மேட்ச் பார்க்க வருவார்களோ அதே போல தளபதி விஜய்க்காக மலேசிய மக்கள் ஒட்டுமொத்த ஸ்டேடியத்தையும் ஹவுஸ்ஃபுல் ஆக்கி தளபதி கச்சேரியில் வைப் ஆகி வருகின்றனர்.
விஜய் எப்போ பேசுவார்: இன்று மதியம் 3 மணி முதல் தளபதி கச்சேரி நடைபெற்று வருகிறது. பாடகர்கள் தளபதி விஜய்யின் ஸ்பெஷல் பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றனர். 6 மணி முதல் இசை வெளியீட்டு விழா ஆரம்பம் ஆகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 8 மணிக்கு விஜய் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் சுமார் 40 நிமிடங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











