இன்று 'டாக் ஆப் தி டவுன்' ரஜினியோ, சிவாவோ அல்ல: நம்ம சூரி
சென்னை: விநாயகர் சதுர்த்தியும் அதுவுமாக ரசிகர்களும் சரி, திரையுலக பிரபலங்களும் சரி சூரியை பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 டீஸர் இன்று வெளியாகியுள்ளது. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி நடித்துள்ள சீமராஜா படம் இன்று ரிலீஸாகியுள்ளது.
இந்நிலையில் அனைவரையும் தன்னை பற்றியே பேச வைத்துள்ளார் சூரி.
சூரி
இன்று சீமராஜா படம் பார்த்தவர்கள் அனைவரும் சூரியின் சிக்ஸ் பேக் பற்றி தான் பேசுகிறார்கள். ஒரு நகை்சசுவை நடிகர் 8 மாதம் கடுமையாக ஒர்க் அவுட் செய்து சிக்ஸ் பேக்ஸ் வைத்தால் பேசாமல் இருக்க முடியுமா?. அசத்துங்க சூரி.
விஷால்
வாவ், சீமராஜாவுக்காக என் சகோதரர் சூரியின் கடின உழைப்பு. இன்று வெளியாகும் அனைத்து படங்களுக்கும் வாழ்த்துக்கள். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் என்று ட்வீட்டியுள்ளார் விஷால்.
வாழ்த்து
சிக்ஸ் பேக் சூரி. அருமை பிரதர். உங்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பை நினைத்து பெருமையாக உள்ளது. நேரு ஸ்டேடியத்தில் நீங்கள் பேசியது நினைவுக்கு வருகிறது என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.
ஜாக்கி
சிறந்த ஜாக்கி மாடல். அருமை சூரி சகோ. இதுக்கு பேருதான் நாட்டு ஒடம்பா!!! என்று கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குனர் நவீன்.
விசில்
தியேட்டரில் சிவகார்த்திகேயன் சூரியின் சட்டையை கிழித்து அவரின் சிக்ஸ் பேக்கை காட்டிய காட்சியை பார்த்துவிட்டு ரசிகர்கள் விசில் அடித்து அதகளப்படுத்திவிட்டனர்.


Click it and Unblock the Notifications











