என்னது சிறுநீரா? ரச்சிதா உங்கள் தமிழில் தீய வைக்க..ராபர்ட் மாஸ்டர், ராம் உங்கள் புத்தி எங்கே போச்சு?

ராபர்ட் மாஸ்டர், ராம்குமாரிடம் சிறுநீர் வேண்டும் என்று ரச்சிதா கேட்பதும், அவர்கள் சரி என்று மறுக்காமல் போவதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் அல்ல ரச்சிதா ஆனாலும் சிறுநீர் என்ற வார்த்தை கூடவா தெரியாமல் இருக்கும் என்கிற கேள்வியை எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.

மகாராணி டாஸ்க்கில் தூய தமிழில் பேசுகிறேன் என்று ரச்சிதா குடிநீர் கேட்பதை சிறுநீர் என்று கேட்க அதை திருத்தக் கூட தெரியாத அளவிற்கு ராபர்ட், ராம் இருந்ததை காணமுடிந்தது.

 தாய்மொழியில் எழுதத்தெரியாத மொழி அனாதைகள்

தாய்மொழியில் எழுதத்தெரியாத மொழி அனாதைகள்

தமிழ் இனி மெல்ல சாகுமென்று பாரதி எழுதி வைத்தார். ஆனால் இவ்வளவு விரைவாக இவர்கள் வாயில் சிக்கி சீரழிந்து சாவதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்களால் தமிழில் எழுத படிக்க தெரியவில்லை என்கிற நிலை உள்ளது. தான் மனதில் நினைப்பதை தன்னுடைய தாய் மொழியான தமிழில் எழுத முடியாமல் தங்க்லீஷில் எழுதுபவர்களை தினந்தோறும் பார்க்கிறோம்.

வசதியான பிறப்பு கான்வென்ட் படிப்பு? தமிழ் தெரியாது..இது என்ன பிழைப்பு

வசதியான பிறப்பு கான்வென்ட் படிப்பு? தமிழ் தெரியாது..இது என்ன பிழைப்பு

வசதியான இடத்தில் பிறந்து, கான்வென்டில் படித்து வளர்ந்து சினிமா, சின்னத்திரையில் வந்துள்ளவர்களை பார்க்கும் பொழுது அவர்கள் தமிழ் சுத்தமாக தெரியாமல் தடுமாறுவதை பார்க்கும் பொழுது பாரதி சொன்ன அந்த வரிகள் தான் ஞாபகத்துக்கு வருகிறது. பிக் பாஸ் வீட்டில், அவர் கொடுக்கும் டாஸ்கில், தமிழில் எழுதி இருக்கும் அறிவிப்புகளை படிக்க முடியாமல் தமிழ் சீரியல் நடிகைகள், நடிகர்கள், திரை உலகை சேர்ந்தவர்கள் தடுமாறுவதை பல சீசன்களில் பார்த்திருக்கிறோம். பலருக்கு சாதாரண விஷயங்கள் கூட, பொது அறிவு விஷயங்கள் கூட தெரியாமல் இருப்பதையும் பார்த்திருக்கிறோம்.

இவர்கள் எப்படி இத்தனை ஆண்டுகளை கடந்து வந்தார்கள், வாழ்ந்தார்கள் தங்கள் நேரங்களை எப்படி ஒதுக்கினார்கள், எதைப் பற்றியும் தெரியாமல், தெரிந்துக்கொள்ள விரும்பாமல் இப்படி இருக்கிறார்களே என்றெல்லாம் எண்ண தோன்றும். இவர்கள் மத்தியில் சாதாரணமாக ஒரு டிவி செய்தி வாசிப்பாளராக இருந்த சிலர் தாங்கள் பெரிய பத்திரிகையாளர்கள் என்று காட்டிக்கொண்டு பில்டப் செய்ததை எல்லாம் பார்த்தப்போது சிரிப்பு தான் வந்தது.

 ராபர்ட் மாஸ்டரிடம் சிறுநீர் கேட்ட ரச்சிதா? அய்யகோ

ராபர்ட் மாஸ்டரிடம் சிறுநீர் கேட்ட ரச்சிதா? அய்யகோ

இதே நிலை சீசன் 6-ம் தொடர்வதை பார்க்கிறோம். அசீம், விக்ரமன் உள்ளிட்ட சிலர் மட்டுமே தமிழை எழுதுவதும், படிப்பதுமாக இருக்க பலருக்கும் தமிழ் தெரியவே இல்லை. இதில் தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் பலரும் இருப்பதை காண முடிந்தது. இன்று ராஜா ராணி டாஸ்க் நடைபெற்ற போது ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் மகாராணியாக நடித்த ரச்சிதா கேட்டது தான். மதிய உணவின் பொழுது ரட்சிதாவிற்கு உப்பு போட்ட சாப்பாட்டை வைத்துவிட அதை சாப்பிட முடியாமல் தூக்கி எறிந்த ரச்சிதா கோபமாக தனது படுக்கைக்கு போய் அமர்ந்திருந்தார். அவரை ராபர்ட் மாஸ்டர் சமாதானம் செய்து கொண்டிருந்தார் அப்பொழுது ரச்சிதா தனக்கு சிறுநீர் வேண்டும் என்று கேட்க இதைப் பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாமல் ராபர்ட் மாஸ்டரும் சிறுநீரா என்று கேட்டு ஹவுஸ்மேட்சிடம் நீர் கேட்டார்.

ராபர்ட்டைப் போலவே சிறுநீர் பற்றி அறியாத சென்னைவாசி ராம்குமார்

ராபர்ட்டைப் போலவே சிறுநீர் பற்றி அறியாத சென்னைவாசி ராம்குமார்

இதே போல் இரவு சாப்பிடும் முன் ராம்குமார் ரச்சிதாவிடம் சென்று மகாராணி தங்களுக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்க சிறுநீர் வேண்டும் என்று ரச்சிதா சொல்ல அவரும் சிறுநீரா என்று கேட்டுவிட்டு கொண்டு வருகிறேன் என்று சொல்லி திரும்பி சென்றார். இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்து சமூக வலைதளங்களில் காணொளியை வெளியிட்டு விமர்சித்து வருகின்றனர். இவர்களுக்கு சிறுநீர் என்றால் என்னவென்றே தெரியாதோ என்று பலரும் கேட்கின்றனர். சாதாரணமாக சிறுநீர் என்ற வார்த்தை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ரச்சிதா கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவர் ஒருவேளை அவருக்கு தெரியாமல் இருக்கலாம். கன்னடத்தில் சிறுநீரை மூத்ரா என்று அழைக்கின்றனர். நாமும் மூத்திரம் என்று சொல்கிறோம். ஆனாலும் பல ஆண்டுகள் தமிழ் சீரியலில் நடித்து வரும், தமிழர்களுடன் பழகி வரும் இவர் எப்படி அறியாமல் இருக்கிறார்.

 இதையும் கமல்ஹாசன் தான் வந்து திருத்த வேண்டுமா?

இதையும் கமல்ஹாசன் தான் வந்து திருத்த வேண்டுமா?

சரி கன்னடர் என்று மன்னித்து விடலாம், ஆனால் அவர் கேட்டதை திருத்த கூட தெரியாத அளவிற்கு ராபர்ட் மாஸ்டரும், ராம்குமாரும் அதையே திரும்ப சொல்லி சிறிய அளவு கிளாஸில் குடிநீர் கொண்டு வந்து கொடுத்ததை பார்த்த பொழுது எங்கே போய் முட்டிக் கொள்வது என்றே தெரியவில்லை. தமிழ் இனி மெல்ல சாகும் என்றுதான் தெரிகிறது. தமிழில் உள்ள வார்த்தைகள் பற்றி இவர்கள் எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். தமிழில் எழுத படிக்கத்தான் தெரியவில்லை சரியான வார்த்தைகளை கூட உச்சரிக்க தெரியவில்லை. ஆங்கிலத்தில் தான் பெரும்பாலும் பேச வருகிறது. பிக் பாஸ் இதை இரண்டு முறை கேட்டும் திருத்தாமல் வேடிக்கை பார்த்தது ஏன் என்று தெரியவில்லை. தற்போது ரச்சிதா சிறுநீர் கேட்ட காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதையும் உலக நாயகன் தான் வந்து திருத்த வேண்டுமா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X