வடிவேலுவை சூட்டிங் ஸ்பாட்டில் கொடுமை செய்யும் பிரபுதேவா… வடிவேலு என்ன செய்வார் தெரியுமா?

சென்னை: நடனத்திற்கு பிரபுதேவா என்றால் காமெடிக்கு வடிவேலு. இந்த இருவரும் இணைந்து பணிபுரிந்த பல படங்களின் நகைச்சுவை காட்சிகள் என்றும் மக்கள் மனதில் நிற்கக் கூடியவை.

சில நடிகர்களுடன் வடிவேலு கூட்டணி அமைத்தால், அந்த நகைச்சுவை காட்சிகள் செம ஹிட் ஆகும். பார்த்திபன், சத்யராஜ், விஜய் என்று ஒரு பட்டியலே இருக்கிறது. அந்த வகையில் வடிவேலு-பிரபுதேவா கூட்டணியும் மிகவும் பிரபலம்.

காதலன், ராசய்யா, மிஸ்டர் ரோமியோ, மனதை திருடிவிட்டாய் என்று அவர்களது வெற்றிக் கூட்டணியை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். திரைக்கு முன்னால் மட்டுமல்லாமல் திரைக்குப் பின்னாலும் இவர்கள் நல்ல நண்பர்கள்.

வடிவேலு - பிரபுதேவா

வடிவேலு - பிரபுதேவா

பிரதேவா ஹீரோவாக நடித்த படங்களில் வடிவேலு காமெடி நடிகராக நடித்தார் என்பதைத் தாண்டி, பிரபுதேவ இயக்கிய படங்களிலும் வடிவேலுவை நடிக்க வைத்துள்ளார். போக்கிரி படத்தின் நகைச்சுவை எந்த அளவிற்கு பிரபலம் என்று சொல்லத் தேவையில்லை. அதன் பின் வில்லு, படத்திலும் நடித்தார் வடிவேலு. அந்தப் படத்தின் புரமோஷனின்போது கூட, பிரபுதேவா தன்னை பாடாய் படுத்தி காமெடியை பிழிந்து எடுத்துவிட்டார் என்று வடிவேலு பாராட்டி பேசியிருந்தார்.

பிரபுதேவாவின் சேட்டைகள்

பிரபுதேவாவின் சேட்டைகள்

திரைக்கும் முன்னால் மட்டுமில்லாமல் ஸ்பாட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று வடிவேலுவின் வாயில் தண்ணீர் ஊற்றிவிடுவாராம். தனக்கு தோன்றிய சேட்டைகளை அவர் செய்யும்போது,"யப்பா யேய், என்ன பாத்தா மனுஷன் மாதிரி தெரிலையா" என்று வடிவேலு பாவமாக கேட்பாராம்.

வடிவேலுவின் ரசிகன்

வடிவேலுவின் ரசிகன்

வடிவேலு மட்டும் சும்மா இருப்பாரா... பிரபுதேவா இயக்கும் படங்களில் கேமராமேன் ஷாட் ரெடி என்று சொல்லிவிட்டால், பிரபுதேவாவை உப்பு மூட்டை சுமந்து ஸ்பாட்டிற்கு செல்வாராம் வடிவேலு. வடிவேலுவின் சிறந்த பத்து ரசிகர்கள் என்று பட்டியலிட்டால், அதில் தான் இடம்பெற்று விடுவேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபுதேவா குறிப்பிட்டுள்ளார்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

தற்சமயம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் வடிவேலு. அதில் ஒரு பாடலுக்கு பிரபுதேவாதான் கோரியோகிராஃப் செய்துள்ளார். வடிவேலுவின் உடல் கேள்விக் குறி போல் அமைந்திருக்கும். அதனால் பிறப்பிலேயே அவர் நல்ல நடனக் கலைஞர் என்று பிரபுதேபா புகழாராம் சூட்டியுள்ளார். மேலும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து, இவர்கள் வெளியிட்ட "சிங் இன் த ரைன்" வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, சைதாப்பேட்டை, மோனாலிசா உள்ளிட்ட ஹிட் பாடல்களில் பிரபுதேவா நடனத்தில் வடிவேலு ஆடியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X