என்ன சொல்லுவாரோ.. எகிறும் எதிர்பார்ப்பு.. விஜயின் அந்த ஒரு வார்த்தைக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

நடிகர் விஜய் சொல்லப்போகும் ஒரு வார்த்தைக்காக அவரின் ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Recommended Video

Bigil Audio launch on september 19

சென்னை: நடிகர் விஜய் சொல்லப்போகும் ஒரு வார்த்தைக்காக அவரின் ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து இருக்கும் ஸ்போர்ட்ஸ் ஜானர் படமான பிகில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் விஜய் பாடிய ஒரு பாடல் வெளியாகி பெரிய வைரலாகி உள்ளது.

செம திரில்லர் ஸ்ப்போர்ட்ஸ் ஜானரில், படம் நிறைய டிவிஸ்ட் மற்றும் சென்டிமென்ட் உடன் உருவாக்கப்பட்டு இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

என்ன

என்ன

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 19ம் தேதி நடக்கிறது. இன்று காலைதான் இதற்கான அறிவிப்பு வெளியானது. சென்னை லியோ முத்து உள் அரங்கில் இந்த விழா நடக்க உள்ளது.

 எப்போதும் எப்படி

எப்போதும் எப்படி

பொதுவாக விஜய் படங்களில் ஆடியோ வெளியீட்டு விழா பெரிய அளவில் நடைபெறும். மெர்சல், தெறி, சர்க்கார் ஆடியோ வெளியிட்டு விழாக்கள் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிலும் சர்க்கார் ஆடியோ வெளியீட்டு விழா பெரிய ஹிட் அடித்தது.

என்ன சொல்வார்

என்ன சொல்வார்

பொதுவாக ஆடியோ வெளியீட்டு விழாக்களில் விஜய் பேசுவது மக்களால் அதிகம் ரசிக்கப்படும். குட்டி கதைகள் சொல்லி, வார்த்தை ஜாலங்கள் மூலம் விஜய் பேசும் சில வசனங்கள் பெரிய ஹிட் அடிக்கும். சில சிந்திக்க வைக்கும் தத்துவ கதைகளை கூட அவர் சொல்லி இருக்கிறார்.

சர்க்கார்

சர்க்கார்

அதோடு சர்க்கார் பட ஆடியோ விழாவில் நடிகர் விஜய் அரசியல் எல்லாம் பேசினார். ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று கூறி, அவர் பேசிய அரசியல் வசனங்கள், கதைகள் தமிழகத்தில் திடீர் என்று பெரிய வைரல் ஆனது. அவரின் ரசிகர்களும் சர்க்கார் பட ஆடியோ விழாவில் விஜய் பேசியதை வைத்து கொண்டாடிக்கொண்டு இருந்தனர்.

என்ன எதிர்பார்ப்பு

என்ன எதிர்பார்ப்பு

இந்த நிலையில்தான் தற்போது நடிகர் விஜய் பிகில் ஆடியோ விழாவில் என்ன பேசுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கண்டிப்பாக விஜய் அரசியல் குறித்து பேச வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். தமிழகத்தில் தற்போது நடக்கும் நிகழ்வுகள் குறித்து அவர் பேச போகிறார் என்று கூறுகிறார்கள்.

ஸ்டாலின் சந்திப்பு

ஸ்டாலின் சந்திப்பு

நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் நடிகர் விஜய் ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் சார்பாக ஒரு வார்த்தையாவது பேசுவாரா என்று எதிர்பார்ப்பு எகிற தொடங்கி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X