Coolie: ரஜினிகாந்தின் கூலி.. ரசிகர்கள் லோகேஷ் கனகராஜிடம் இருந்து எதிர்பார்ப்பது இதை மட்டும்தான்!
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கிங் நாகார்ஜுனா, ரியல் ஸ்டார் உபேந்திரா, மஞ்சுமெல் பாய்ஸ் சுபாஷ் செளபின் சாஹீர், கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் மற்றும் பாலிவுட்டின் டாப் ஹீரோ அமீர்கான் என நட்சத்திர பட்டாளமே இருக்க கூடவே அனிருத்தின் இசை, பூஜா ஹெக்டேவின் மோனிகா கவர்ச்சி ஆட்டம், அன்பறிவ் மாஸ்டர்களின் சண்டைக் காட்சிகள், கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜின் எடிட்டிங் என ஒரு வெற்றிப் படத்துக்கு தேவையான அனைத்து விஷயங்களும் பல மடங்கு எக்ஸ்ட்ராவாகவே உள்ளன.
இதன் காரணமாக ரஜினிகாந்தின் கூலி படத்தின் டிக்கெட் புக்கிங் ஓபன் செய்யப்பட்ட மறுகணமே டிக்கெட்டுகள் அசுர வேகத்தில் விற்றுத் தீர்ந்துள்ளன. கண்டிப்பாக பாக்ஸ் ஆபீஸ் வசூலுக்கு எந்தவொரு பாதிப்பும் வராது என்றே தெரிகிறது.

ஏனென்றால் முதல் 4 நாட்களுக்கும் பல தியேட்டர்களில் அரங்கம் நிறைந்து விசிலை பறக்க விட இப்போதே ரசிகர்கள் தயாராகி விட்டனர். இந்நிலையில், கூலி படத்தில் இருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கும் முக்கிய விஷயங்கள் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
ரஜினிகாந்துக்கு முக்கியத்துவம்: சூப்பர் ஸ்டாரை பார்க்கத்தான் படத்தின் கதை மற்றும் எதை பற்றியும் கவலைப்படாமல் ரசிகர்கள் லீவு போட்டுவிட்டு வியாழக்கிழமை கூலி படத்தை பார்க்க தயாராக உள்ளனர். அதிலும், இந்த முறை 'ஏ' சான்றிதழ் என்பதால் ஜெயிலர் படத்தில் தலையை வெட்டிய மாஸ் காட்சியைத் தாண்டிய சீனை லோகேஷ் கனகராஜ் தலைவருக்காக செதுக்கியிருப்பார் என்கிற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. நாகார்ஜுனா, அமீர்கான், செளபின் சாஹீர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சார்லி என ஏகப்பட்ட நடிகர்கள் உள்ள நிலையில், ரஜினிகாந்தின் ஸ்க்ரீன் டைமிங்கை குறைக்காமல் சரியாக படம் முழுவதும் சூப்பர் ஸ்டார் மாஸாக வந்தாலே ரசிகர்களுக்கு அதைவிட பெரிய விருந்து எதுவும் இருக்காது.
கதையும் திரைக்கதையும்: இத்தனை நடிகர்களை வைத்துக் கொண்டு லோகேஷ் கனகராஜ் பழைய பழிவாங்கும் கதையையோ நரபலி கொடுக்கும் ஃபிளாஷ்பேக்கையோ படத்தில் வைத்தால், நிச்சயம் ரசிகர்கள் எரிச்சலடைவார்கள். கத்தி, விக்ரம் படம் போல செம க்ரிப்பிங்கான கதை மற்றும் திரைக்கதையை மட்டுமே லோகேஷ் கனகராஜிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்போது தான் நாகார்ஜுனா சொன்ன 100 பாட்ஷா பில்டப்புக்கு வொர்த்தாக இருக்கும்.
மற்ற நடிகர்களுக்கு முக்கியத்துவம்: வெறும் ரஜினிகாந்த் துதி பாடுகிறேன் என்கிற பெயரில் அவருக்கு மட்டுமே அதிக ஸ்கோப் கொடுத்துவிட்டு மற்ற நடிகர்களையும் குறிப்பாக வில்லனான நாகார்ஜுனாவுக்கு டம்மி ரோல் கொடுத்தாலும் படம் படுத்துவிடும். 6 முறை நாகார்ஜுனா ரிஜெக்ட் பண்ணி 7வது முறை அவர் ஓகே சொன்ன நிலையில், அவருக்கான போர்ஷன் கச்சிதமாக இருந்தாலே கூலி படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்பது நிதர்சனம்.
இரண்டாவது பாதி முக்கியம்: இடைவேளை காட்சி பயங்கர பிளாஸ்ட்டாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதை தொடர்ந்து இரண்டாம் பாதியும் வலுவாக இருந்தால் மட்டுமே கூலி பான் இந்தியா வெற்றியை பெறும் என்பது உறுதி. லியோ படத்தின் முதல் பாதி சூப்பராக இருந்ததே அந்த படத்தை பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற வைத்தது. 2ம் பாதி அதில், சொதப்பியதை போல கூலி படத்தில் கண்டிப்பாக லோகேஷ் கனகராஜ் சொதப்ப மாட்டார் என்கிற நம்பிக்கையில் தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் டிக்கெட் வாங்கியுள்ளனர். அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றினாலே போதும். அதுதான் அவர் வாங்கும் 50 கோடி ரூபாய் சம்பளத்துக்கு சரியானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











