»   »  9ம் தேதி மாஸ் அறிவிப்பு வெளியிடும் தனுஷ்: ஒரு வேளை 'அது' இதுவா?

9ம் தேதி மாஸ் அறிவிப்பு வெளியிடும் தனுஷ்: ஒரு வேளை 'அது' இதுவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுஷ் நாளை மறுநாள் வெளியிட உள்ள மாஸ் அறிவிப்பு எதுவாகவிருக்கும் என பலரும் ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொடி படம் ஹிட்டாகியுள்ள மகிழ்ச்சியில் உள்ளார் தனுஷ். பாலிவுட் நட்சத்திரங்களை போன்று ஊர், ஊராக சென்று படத்தை விளம்பரம் செய்தது வீண் போகவில்லை.

இந்நிலையில் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

விரைவில் மாஸ் அறிவிப்பு. என்னவென்று கண்டுபிடியுங்கள் என தெரிவித்துள்ளார்.

அவரது ட்வீட்டை பார்த்த பலரும் பல விஷயங்கள் பற்றி யோசித்து மாஸ் அறிவிப்பு இதுவாக இருக்குமோ, அதுவாக இருக்குமோ என்று தெரிவித்தனர். இதை பார்த்த தனுஷ் ட்வீட்டியிருப்பதாவது,

பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது. புதன்கிழமை அறிவிப்பு வெளியிடுவேன். பொறுமைக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் செல்வராகவன் இளைய தளபதி விஜய்யை வைத்து இயக்கும் படத்தை தனுஷ் தயாரிக்கலாம். அது தான் மாஸ் அறிவிப்பாக இருக்கும் என்ற பேச்சும் உள்ளது.

English summary
Dhanush is going to make a mass announcement on wednesday. People are guessing what would be that announcement about?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil