சிட்டிசன் அஜித்தா.. தசாவதாரம் கமலா.. தூம் 2 ஹிரித்திக்கா.. எப்படி வரப் போறாரு கோப்ரா விக்ரம்?

சென்னை: சியான் விக்ரமின் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த பலரும் வாயை பிளந்த படியும், அந்த ஃபர்ஸ்ட் லுக்கில் என்ன என்ன விஷயங்கள் ஒளிந்திருக்கிறது என்றும் ஜூம் செய்து பார்த்து வருகின்றனர்.

மேலும், சிலர் ஏற்கனவே வெளியான அஜித்தின் சிட்டிசன், கமலின் தசாவதாரம் மற்றும் ஹிரித்திக் ரோஷனின் தூம் 2 படங்களுடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என இரு வித்தியாசமான படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து ஏமாற்ற மாட்டார் என்றும் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட #CobraFirstLook, #ChiyaanVikram என இரு ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.

நீங்கதான்

தலைவா அஜய் ஞானமுத்து அண்ணா நீங்க தான் சியான் விக்ரம் அண்ணனுக்கு பொருத்தமான டைரக்டர் என கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து வாயடைத்துப் போன இந்த விக்ர ரசிகர் கமெண்ட் செய்துள்ளார். சியான் விக்ரமின், முழு உழைப்பும் இந்த படத்தில் தெரியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

யார் சார் நீங்க

சியான் விக்ரமின் கோப்ரா பட இயக்குநர் அஜய் ஞானமுத்துவுக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில், விக்ரம் ரசிகர்கள் பாராட்டுக்களால் திக்குமுக்காட வைத்து வருகின்றனர். யார் சார் நீங்க.. லவ் யூ சார்.. என்ன சொல்றதுனே தெரியல அந்த பிரம்மிப்புல இருந்து இன்னும் வெளிய வர முடியல என இந்த ரசிகர் பயங்கரமா பாராட்டி உள்ளார்.

புல்லரிக்குது

கோப்ரா படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த சியான் விக்ரம் ரசிகர்கள் உற்சாகமாக ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். 7 வித்தியாசமான கெட்டப்பில் சியன் விக்ரமை பார்த்த ரசிகர்களுக்கு, நிச்சயம் இப்படி புல்லரித்து இருக்கும் என போட்டோ மீம் போட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பாவம் சியான்

சிட்டிசன் அஜித் மாதிரி விதவிதமான கெட்டப்ல பழி வாங்குவார் இல்லைன்னா கொள்ளையடிப்பார்.. சியான பார்த்தா பாவமா இருக்கு என இந்த நெட்டிசன் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக்கை ட்ரோல் செய்துள்ளார். அதீத உழைப்பை விக்ரம் ஒவ்வொரு படத்துக்கும் கொட்டி வருகிறார். ஆனால், இயக்குநர்களின் சொதப்பல்களால் தான் விக்ரமின் படங்கள் வெற்றி பெறுவதில்லை.

விஜய் ரசிகர்கள் வாழ்த்து

சியான் விக்ரம் படங்களுக்கு எப்போதுமே, விஜய் ரசிகர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். தற்போது, வெளியாகி இருக்கும் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து விட்டு, வேற லெவலில் வெறித்தனமா இருக்கு என விஜய் ரசிகர்கள் படம் வெற்றி பெற வாழ்த்தி ட்வீட் போட்டு வருகின்றனர்.

அதுக்கும் மேல

கோப்ரா படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆன போதே, இந்த படம் வேற மாதிரி பெருசா இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். தற்போது, ஹாலிவுட் ஸ்டைலில் 7 கெட்டப்புகளுடன் வெளியாகி இருக்கும் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள், வெறித்தனம் தலைவா, எதிர்பார்த்ததுக்கும் மேல இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

என்ன கதை?

என்ன கதை?

கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் 7 விதமான கெட்டப்பில் சியான் விக்ரம் தோன்றியுள்ள நிலையில், இந்த படம், சிட்டிசன் படத்தை போன்று இருக்குமா? கமலின் தசாவதாரம் போல இருக்குமா? ரித்திக் ரோஷனின் தூம் 2 போல இருக்குமா? இல்லை அந்நியன் படத்தில் வரும் மல்டிபிள் பர்சனாலிட்டி படமா? என யூகங்கள் எகிறுகின்றன.

மே ரிலீஸ்

மே ரிலீஸ்

தளபதி விஜய்யின் மாஸ்டர் மற்றும், சூர்யாவின் சூரரைப் போற்று படங்களுடன் ஏப்ரலில் மோதாமல், சியான் விக்ரமின் கோப்ரா படம் மே மாதம் வெயிட்டாக ரிலீஸ் ஆகப் போகுது. வெயிட் பண்ணலாம், அஜய் ஞானமுத்து வேறு ஒரு தளத்தை தொட்டு அசத்தவும் வாய்ப்பிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X