சிம்புவுக்கு இப்போ அது நடந்தே ஆகணுமாம்!: ரசிகர்களோட எதிர்பார்ப்பு என்ன ஆகப் போகுதோ?

சென்னை: கோலிவுட் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு 'மாநாடு' படத்தின் வெற்றிக்குப் பின்னர் படு பிஸியாக காணப்படுகிறார்.

Recommended Video

STR |POSITIVITY நிறைய தெரியுது ! Simbu Super Emotional Speech | Paper Rocket Trailer| *Launch

சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல' படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

அவரது தந்தை டி.ஆர். ராஜேந்திரனுடன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த சிம்பு தற்போது சென்னை திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தடம் பதித்த சிம்புவிற்கு, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விரல்களை சொடுக்கி பஞ்ச் வசனங்கள் பேசியபடி வில்லன்களை பந்தாடும் சிம்புவின் ஆக்சன், எப்பவும் படு தூக்கலாக தூள் கிளப்பும். அதேபோல், சிறந்த நடிகர், டான்ஸர், சிங்கர் என ஆல் இன் ஆல் மாஸ் காட்டுவதிலும் சிம்பு ஒரு வல்லவன் என்பது ரசிகர்களின் கருத்து.

விடா முயற்சி... விஸ்வரூப வெற்றி!

விடா முயற்சி... விஸ்வரூப வெற்றி!

திரைப்படங்களில் வெற்றி தோல்வி என மாறி மாறி பயணித்த சிம்பு, சில வருடங்களாக திரையில் வராமலேயே தனித்திருந்தார். அதுக்கெல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமாக சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாநாடு' மெகா ஹிட் அடித்தது. ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்த சிம்பு, தன்னை விமர்சித்தவர்களை சுளுக்கெடுத்து இனி திரும்பியே பார்க்க முடியாத தூரத்திற்கு ஓடவிட்டார்.

அடுத்தடுத்து காத்திருக்கும் அதிரடி

அடுத்தடுத்து காத்திருக்கும் அதிரடி

'மாநாடு' படத்திற்குப் பின்னர் கெளதம் வாசுதேவ் உடன் ‘வெந்து தணிந்தது காடு', கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல' படங்களில் பிசியாக நடிக்கத் துவங்கினார். இந்த இரண்டு படங்களுக்குமே இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் நிலையில், அடுத்தடுத்து இத்திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளன. இதனிடையே, கேமியோ ரோலில் ஹன்சிகா உடன் இணைந்து சிம்பு நடித்துள்ள ‘மஹா' இன்று வெளியாகியுள்ளது.

இதுவும் கடந்து போகும்!

இதுவும் கடந்து போகும்!

சிம்பு சினிமாவில் சிக்ஸர்கள் அடிப்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், ரசிகர்கள் அவர்கிட்ட எதிர்பார்ப்பது என்னவோ மங்களகரமான அந்த செய்திய மட்டும் தான். ஆரம்பத்துல சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் காதல்ன்னு பரபரப்பான செய்திகள் வெளியாகின. ஆனா அடுத்து நடிகை ஹன்சிகாவ திருமணம் செய்யப் போறதா இன்னொரு ஸ்வீட் நியூஸ் ரசிகர்களுக்கு கிடைத்தது. இறுதியில் அதுவும் இல்லையென சோகத்தில் முடிந்துப் போனது.

புது வசந்தம்

புது வசந்தம்

பழைய கதையெல்லாம் முடிந்துபோக, சமீபத்தில் சிம்புவிற்கு நடிகை நித்தி அகர்வாலுக்கும் இடையே காதல் என புது வசந்தம் வீசத் தொடங்கியது. கண்டிப்பாக இந்த காதல் கல்யாணத்தில் கைகூடும் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு, அதுவும் ஏமாற்றமாகிப் போனது. நடுவில் சீரியல் நடிகையின் அட்ராசிட்டியும் சிம்புவை பாடாய்ப்படுத்தி எடுத்தது தனிக் கதை. ஆனாலும், சிம்புவை திருமணம் செய்துகொள்பவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியோடு காத்திருக்கின்றனர்.

டி.ஆர் போட்ட ரூட்டு

டி.ஆர் போட்ட ரூட்டு

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய சிம்புவின் தந்தை டி.ஆர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சிம்புவின் திருமணம் குறித்து பேசிய டி.ஆர், இருக்கும் அனைத்து கடவுள்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு, சிம்புவின் திருமணம் விரைவில் நடக்கும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X