Venkat Prabhu - விஜய்யை இயக்கும் வெங்கட் பிரபு.. அப்போ சிவகார்த்திகேயன் நிலைமை?

சென்னை: Venkat Prabhu (வெங்கட் பிரபு) நடிகர் விஜய்யை வெங்கட் பிரபு இயக்கப்போகிறார் என தகவல் வெளியாகியிருக்கும் சூழலில் சிவகார்த்திகேயனின் நிலைமை என்ன ஆகுமென்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

பீஸ்ட் படத்தின் தோல்வி, வாரிசு படத்துக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். முந்தைய இரண்டு படங்களும் சரியாக போகாததால் இந்தப் படம் கட்டாயம் ஹிட்டாக வேண்டும் என்ற ஆவலோடு பணியாற்றிவருகிறார். அதேபோல் தொடர்ச்சியாக ஐந்தாவது ஹிட்டை கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

Thalapathy 68 will be directed by Venkat Prabhu

லியோ ஷூட்டிங்: காஷ்மீரில் நடந்த ஷூட்டிங்கைத் தொடர்ந்து சென்னையில் தற்போது ஷூட்டிங் நடந்துவருகிறது. இதில் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் பங்கேற்றிருக்கின்றனர். அதுமட்டுமின்றி ஒரு பிரமாண்ட பாடலும் ஷூட் செய்யப்படவிருக்கிறது. அதில் மொத்தம் 2000 நடன கலைஞர்கள் விஜய்யுடன் நடனம் ஆடவிருக்கிறார்கள். அதற்காக டான்ஸர்களை தேடும் பணியில் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

Since yesterday, new information has been floating around about Thalapathy 68. Accordingly, Thalapathy 68 will be directed by Venkat Prabhu and AGS is producing the film; Information spread rapidly on social media as Yuvan Shankar Raja music. Fans are hoping that Venkat Prabhu, who gave Ajith Block Buster Mangatha, will also give a mega block buster with Vijay.

விஜய் 68: லியோ படம் ஒருபக்கம் பரபரப்பாக வளர்ந்துகொண்டிருக்க மறுபக்கம் விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற கேள்வியும் சில வாரங்களாக ரசிகர்களிடையே எழுந்தது. தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய அட்லீ இயக்குவார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர் ஜவானில் பிஸியாக இருப்பதாலும், இன்னும் சில காரணங்களாலும் அட்லீ இயக்கவில்லை என சொல்லப்படுகிறது. எனவே தெலுங்கு இயக்குநர் இயக்குவார் என தகவல் வெளியானது.

அய்யய்யோ தெலுங்கு இயக்குநரா?: இந்தத் தகவல் ஏறத்தாழ உறுதி என பரவலாக பேசப்பட்ட நிலையில் விஜய்யின் ரசிகர்கள் அச்சத்தின் உச்சத்துக்கு சென்றனர். ஏற்கனவே வாரிசு படத்தின் மூலம் விஜய்யை தெலுங்கு இயக்குநர் செய்துவிட்டார். இப்போது மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குநரா? விஜய் எதற்காக இந்த ரிஸ்க் எடுக்கிறார் என்று ஓபனாகவே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தனர்.

Since yesterday, new information has been floating around about Thalapathy 68. Accordingly, Thalapathy 68 will be directed by Venkat Prabhu and AGS is producing the film; Information spread rapidly on social media as Yuvan Shankar Raja music. Fans are hoping that Venkat Prabhu, who gave Ajith Block Buster Mangatha, will also give a mega block buster with Vijay.

வெங்கட் பிரபு இயக்கம்?: இந்நிலையில் நேற்றிலிருந்து தளபதி 68 குறித்து புதிய தகவல் உலாவுகிறது. அதன்படி தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்றும் ஏஜிஎஸ் நிறுவனம்தான் படத்தை தயாரிக்கிறது; யுவன் ஷங்கர் ராஜா இசை என சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவியது. அஜித்துக்கு மங்காத்தா எனும் ப்ளாக் பஸ்டர் கொடுத்த வெங்கட் பிரபு விஜய்யை வைத்தும் ஒரு மெகா ப்ளாக் பஸ்டர் கொடுப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.

 new information has been floating around about Thalapathy 68.

அப்போ சிவகார்த்திகேயன் நிலைமை: இந்தத் தகவல் ஒரு பக்கம் சுற்றிகொண்டிருக்க மறுபக்கம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஒரு கேள்வியை கேட்டுவருகின்றனர். அதாவது, கஸ்டடி படத்தை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக இருந்தது. ஆனால் இப்போது விஜய்யை வைத்து படம் இயக்குகிறார் என்று தகவல் பரவுகிறதே. அப்போத், எஸ்கே - வெங்கட் பிரபு அமைக்கவிருந்த கூட்டணி பாதியிலேயே கைவிடப்பட்டதா? சிவகார்த்திகேயனுக்கு வெங்கட் பிரபு ஒரு ப்ளாக் பஸ்டர் கொடுப்பார் என்று நினைத்திருந்தது கனவாகிப்போனதா என்று ஏக்கத்துடன் கூறிவருகிறார்கள் எஸ்.கே. ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X