Don't Miss!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Sports DC vs GT : டாப் ஆர்டரில் அசத்திய அக்சர் படேல்.. ஜடேஜாவை பொளக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என்னது...விக்ரம் பார்ட் 3 வருதா... கமல் சொன்ன அட்டகாசமான தகவல்?
சென்னை : விக்ரம் பார்ட் 3 வர போவதாக கமல் தனது பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். பேட்டியில் கமல் கூறி உள்ள தகவல்கள் சினிமா ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தாலும் இது பல கேள்விகளையும் ஏற்படுத்தி உள்ளது.
1986 ம் ஆண்டு கமல், அம்பிகா, சத்யராஜ் நடித்து வெளிவந்த படம் விக்ரம். ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடத்தப்பட்ட ராக்கெட்டை கண்டுபிடித்து, மீட்பது தான் படத்தின் கதை. மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமான இந்த படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார். தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு அதே டைட்டிலில் கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி உள்ளார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ்.
தற்போது எடுக்கப்பட்டுள்ளது விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்படுகிறது. இந்த படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. கமல் லீட் ரோலில் நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதன் படத்தின் இந்தி மொழி டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
NFT Sale, Metaverse.. விக்ரம் படத்தை வேறலெவலுக்கு கொண்டு சென்ற கமல்.. டெக்னாலஜி நாயகனாச்சே!
கேன்ஸ் விழாவில் விக்ரம் டிரைலர்
தமிழில் விக்ரம் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த டிரைலர் ஃபிரான்சில் தற்போது நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இதற்காக கமல் ஃபிரான்ஸ் சென்றுள்ளார். கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சென்றுள்ள கமலிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில், விக்ரம் படத்தில் நான்காவது ஒருவர் வருவதாக வதந்தி பரவி வருகிறதே என கேட்கப்பட்டது.
என்னது விக்ரம் 3 வருதா
இதற்கு பதிலளித்த கமல், வதந்தி எல்லாம் இல்லை. உண்மை தான். நான்காவது நபராக சூர்யா, அற்புதமான ரோலில் கடைசி நிமிடத்தில் தோன்றி நடித்துள்ளார். அவர் தான் கதையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறார். அது பார்ட் 3 க்கான ஆரம்பமாக இருக்கும் என்றார். இதை கேட்ட ரசிகர்கள் என்னது விக்ரம் பார்ட் 3 வருதா என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.
கைதி 2 ல் சூர்யா வில்லனா
அதே சமயம் ஏற்கனவே வெளியான தகவலின்படி, க்ளைமாக்சில் 10 நிமிடங்கள் சூர்யா வரும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில் கைதி 2 பட கதையின் ஆரம்பமாக இருக்கும். கைதி படத்தின் முதல் பாகத்தில் நடித்த கேரக்டர்கள் பலரும் இதிலும் நடித்துள்ளதால், கைதி படத்துடன் தொடர்புடையதாக விக்ரம் படம் இருக்கும் என்றும் கூறப்பட்டது. அதே சமயம் கைதி 2 படத்தில் சூர்யாவும் முக்கிய ரோலில் நடிக்கிறாரா, கைதி 2 படத்தில் சூர்யா தான் வில்லனா என்றும் ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
கைதி 2 ஆ? விக்ரம் 3 ஆ?
இந்த சமயத்தில் கமல் சொல்லி இருக்கும் தகவலால் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க போவது கைதி 2 ஆ அல்லது விக்ரம் 3 ஆ என்ற கேள்வி எழுந்துள்ளது. விக்ரம் படத்தின் இரண்டு பாகங்களில் கமல் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் விக்ரம் 3 படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க போகிறாரா என பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!