தியேட்டர்ல பார்த்தாதான் படம் சூப்பரா இருக்கும்.. நெட்ப்ளிக்ஸ் அந்த அனுபவத்த தராது.. தனுஷ் வெளிப்படை
சென்னை : ஜகமே தந்திரம் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
இந்த ட்ரெயிலரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷூம் வெளியிட்டுள்ளார்.
கூடவே தியேட்டரில் பார்க்கும் அனுபவத்தை நெட்ப்ளிக்ஸ் எப்படி தரும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரவேற்பு பெற்ற பாடல்கள்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில் இன்றைய தினம் படத்தின் புதிய ட்ரெயிலர் வெளியாகி பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

தனுஷ் ஆர்வம்
படம் தியேட்டரில் வெளியாகும் அளவிற்கு சிறப்பாக அமைந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். ஆனால் படம் வரும் 18ம் தேதி நெட்ப்ளிக்சில் வெளியாக உள்ளது. மாஸ்டர் படத்தின் ரிலீசின் போது விரைவில் தியேட்டரில் சந்திப்போம் என்று நடிகர் தனுஷ் தெரிவித்திருந்தார்.

நடிகர் தனுஷ் அதிருப்தி
இதனிடையே படம் நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ளதாக தயாரிப்புக்குழுவினர் அறிவித்தனர். வரும் 18ம் தேதி நெட்ப்ளிக்ஸில் படம் வெளியாகவுள்ளது. இதையடுத்து நடிகர் தனுஷ் இதுகுறித்து அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அடுத்தடுத்த சிங்கிள்களை கூட அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்யவில்லை.

சிறப்பான அனுபவத்தை தராது
இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெயிலரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள தனுஷ், நெட்ப்ளிக்ஸ் எப்படி தியேட்டர் அனுபவத்தை தரும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆயினும் ரசிகர்கள் ஜகமே தந்திரம் மற்றும் சுருளி கேரக்டரை என்ஜாய் செய்வார்கள் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசை
தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் இந்த படம் முதல்முறையாக உருவாகியுள்ளது. கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த படம் சிறப்பான அனுபவத்தை அளிக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் பாடல்களாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











