சின்மயி சொல்வது உண்மையே: நடிகை சமந்தா #MeToo

By Siva

Recommended Video

சின்மயி சொல்வது எல்லாம் உண்மையே - சமந்தா அதிரடி- வீடியோ

சென்னை: வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள பாடகி சின்மயிக்கு நடிகை சமந்தா ஆதரவு தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்துக்கு சென்ற இடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி புகார் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் பாலியல் தொல்லை குறித்து பிரபலங்கள் பேசத் துவங்கியுள்ள நிலையில் சின்மயியும் பேசியுள்ளார்.

அந்த சம்பவத்திற்கான ஆதாரங்களை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளதாக சின்மயி கூறியுள்ளார்.

ஆதரவு

டியர் ராகுல், சின்மயி. எனக்கு உங்கள் இருவரையும் 10 ஆண்டுகளாக தெரியும். நீங்கள் மிகவும் நேர்மையானவர்கள். இந்த குணம் தான் நம் நட்பில் நான் அதிகம் மதிப்பது. நீங்கள் சொல்வது உண்மையே !! #istandwithchinmayi என்று ட்விட்டரில் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

பயம்

சம்பவம் நடந்து 13 ஆண்டுகள் கழித்து தற்போது ஏன் சின்மயி பேச வேண்டும் என்று ஒருவர் கேள்வி எழுப்பியதை பார்த்த சமந்தா பதில் அளித்துள்ளார். அவர் தனது பதில் ட்வீட்டில் கூறியிருப்பதாவது, ஏனென்றால் நாங்கள் பயந்துவிட்டோம். இது எங்களின் தவறு என்று நீங்கள் ஆக்கிவிடுவீர்கள் என்று.

சின்மயி

சின்மயி

என் சகாக்கள் எனக்காக பேச பயப்படுகிறார்கள். அவர்களை நான் குறை சொல்ல மாட்டேன். எப்பொழுது பேச வேண்டும் இல்லை பேசாமல் இருப்பது என்பது அவர்களுடன் விருப்பம் என்று சின்மயி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லை கொடுப்பவர்களின் பெயர்களை தொடர்ந்து ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார் அவர்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை குறித்து தற்போது பேச முடிவு செய்தேன். ஏனென்றால் இது தான் சரியான நேரம். இது மக்கள் இயக்கமாக மாறாமல் இருந்திருந்தால் வெளிப்படையாக பேசும் தைரியம் எனக்கு வந்திருக்காது. இந்த விஷயங்களை எல்லாம் என் மனதில் வைத்து பூட்டியிருப்பேன் என்று சின்மயி கூறியுள்ளார். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுகளும், விமர்சனங்களும் வந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X