Vijay: என்ன நடந்தாலும் உங்க கூடதான்.. நாளை வாக்கு எண்ணிக்கை.. விஜய் ரசிகர்கள் போஸ்டை பாருங்க

சென்னை: நடிகர் விஜய் தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முதல் முறையாக தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை எதிர் கொண்டுள்ளார். மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள், விஜய் ஆதரவாளர்கள், அவரது கட்சியினர் உள்ளிட்ட பலரும் விஜய் மற்றும் அவரது கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று, விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் விஜய் தோற்றால் என்ன செய்வது என்ற பதற்றத்திலும் இருக்கிறார்கள். இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக பதிவிட்டு வருகிறார்கள்.

நடிகர் விஜய் ஜன நாயகன் தான் கடைசி படம், இந்த படத்திற்கு பின்னர் முழுக்க முழுக்க அரசியல் தான் என்று அறிவித்து தனது விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்றி அறிவித்தார். அவர் அப்படி அறிவித்து முதன் முதலாக தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ளார். தேர்தல் பிரசாரத்திற்காக மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக பிரசாரம் செய்யவில்லை, மக்களை முறையாக சந்திக்கவில்லை என பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது.

Whatever Happens We Stand With You Vijay Fans Go Emotional Ahead of Counting Day

தேர்தல் நாள் மற்றும் அதற்கு அடுத்த ஒரு வாரம் முழுவதும் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தோம் என்று அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் வெள்ளை நிறச் சட்டை, வெளிர் காக்கி நிற பேண்ட் அணிந்து கொண்டு வாக்களிக்க சென்ற போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்தது குறித்துதான் பேச்சுக்கள் அதிகாம இருந்தது. ஆனால் திமுக, அதிமுக, நாம் தமிழர் என களத்தில் இருந்த கட்சிகளுக்கு வாக்களித்த மக்கள், இது போல வீடியோக்களைப் பதிவிடாமல் அடுத்த வேலையைப் பார்க்க சென்றுவிட்டனர்.

கருத்துக் கணிப்பு: மேலும் கருத்துக் கணிப்பில் திமுக ஆட்சிக்கு வரும் என்று சிலவும், அதிமுக ஆட்சிக்கு வரும் என்று சிலவும் தெரிவித்தன. ஆனால் தவெக ஆட்சி அமைக்கும் என தெரிவித்த கருத்துக் கணிப்பு மிகவும் குறைவு, அப்படி இருக்கையில் தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் தங்களுக்கு சாதகமான கருத்துக் கணிப்பை, மிகவும் அதிக அளவில் சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர்.

Whatever Happens We Stand With You Vijay Fans Go Emotional Ahead of Counting Day

திடீர் போஸ்ட்: இப்படி இருக்கையில் விஜய் வென்று விடுவார் என்று நம்பிக்கையில் இருந்த அவரது ரசிகர்கள் தற்போது, எப்படியாவது ஜெயிச்சுடு அண்ணா, உன்னை நம்பி ஊரு முழுக்க நான் வம்பு இழுத்து வெச்சு இருக்கேன் என்றும், தலைவா என்ன நடந்தாலும் என் உடம்புல கடைசி சொட்டு ரத்தம் இருக்கிற வரைக்கும் நான் சுவாசிக்கிற கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் உங்க கூட தான் தலைவர் இருப்பேன் என்றும் பதிவிட்டு வருகிறார்கள். அவர்களின் இப்படியான போஸ்ட்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. மேலும் இந்த போஸ்ட்களை பார்த்த மாற்றுக் கட்சியினர் கலாய்த்தும் வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X