சசி குமார் நடிப்பில் நவம்பர் 26ஆம் தேதி "ராஜவம்சம்" ஓகே ...வேற என்ன ஸ்பெஷல் லிஸ்ட்
சென்னை: நடிகர் சசிகுமார் நடிப்பில் தொடர்ந்து கமர்ஷியல் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது
Recommended Video
இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் பாடகர் என பல முகங்களை கொண்டுள்ள சசிகுமார் இப்பொழுது இயக்குனர் கதிர்வேல் இயக்கத்தில் ராஜவம்சம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் நவம்பர் 26 ஆம் தேதி வெளியாவதையொட்டி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கதாநாயகனாக ரூட்டை மாறினார்
பாசமுள்ள மனிதனப்பா நான் மீசை வச்ச குழந்தையப்பா என்ற வரிகளுக்கு ஏற்றவாறு நடிகர் சசிகுமார் இப்போது தமிழ் சினிமாவில் வெற்றிகரமான கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் . ஆரம்பத்தில் இயக்குனராக வேண்டும் என தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் ஒரு சில திரைப்படங்களிலேயே கதாநாயகனாக ரூட்டை மாற்றினார். இருப்பினும் இயக்கிய சில திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று ஒட்டு மொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது

நேரடியாக ஓடிடி தளத்தில்
இந்த நிலையில் சிவகார்த்திகேயனுடன் தொடர்ந்து ஹேட்ரிக் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவான எம்ஜிஆர் மகன் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. குடும்ப ரசிகர்களை இந்த திரைப்படம் வெகுவாக கவர்ந்து வெற்றி பெற்றது. அதையடுத்து கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட பல படங்களில் சசி குமார் பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளார்.

ராஜவம்சம்
இதில் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார் ப்ரேமம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த மடோனா செபாஸ்டின் சசிகுமாருடன் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும். பகைவனுக்கு அருள்வாய், ராஜவம்சம் உள்ளிட்ட படங்களிலும் சசி குமார் நடித்துள்ளார். இதில் ராஜவம்சம் என்ற படத்தை இயக்குனர் கதிர்வேல் இயக்கியுள்ளார்.

நவம்பர் 26 ஆம் தேதி
சென்ற வருடம் வெளியான தொரட்டி திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தொரட்டி பட இயக்குனரின் அடுத்த படத்தில் சசிகுமார் ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் மந்திர மூர்த்தி என்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் அயோத்தி என்ற படத்திலும் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.கிராமத்து கதையை பின்புலமாக கொண்டு உருவாகியுள்ள "கொம்பு வச்ச சிங்கம்டா" படம் வரும் நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் நவம்பர் 26 ஆம் தேதி திரையரங்குகளில் ராஜவம்சம் வெளியாகும் அதே சமயம் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாவது பற்றி நிறைய பேச்சு அடிபட்டு வருகிறது. இரண்டு சசிகுமார் படங்கள் ஒரே நாளில் வேண்டாம் என்று சிலரும் ,இது தான் சரியான முடிவு என்று சிலரும் சொல்லி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











