உங்கள் ரேட் என்ன? அநாகரிக கேள்வி கேட்ட தொகுப்பாளர்.. செருப்பால் பதிலடி கொடுத்த பாடகி

பீகார்: திரைத்துறை சார்ந்த நிகழ்ச்சிகள் நடக்கும் போது அது தொடர்பான வீடியோக்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு தனி வரவேற்பு உள்ளது. காராணம் தங்களது அபிமான பிரபலங்கள் என்ன பேசி உள்ளார்கள், அந்த மேடையில் அவர்களது நடவடிக்கைகள் எப்படி உள்ளது என்பது உள்ளிட்டவை ரசிகர்கள் விரும்பிப் பார்க்கும் வீடியோக்களாக உள்ளன. சில நேரங்களில் யாரும் எதிர்பாராத சம்பவங்களும் நடைபெறுவது உணடு. அப்படியான ஒரு சம்பவம் தான் பீகாரில் நடைபெற்றுள்ளது. பிரபல பின்னணி பாடகியை நோக்கி மேடையிலேயே தொகுப்பாளர் உங்கள் ரேட் என்ன என்று கேட்க, பாடகியோ செருப்பைக் கழட்டி அடித்துள்ளார்.

பீகார் மாநிலம் சாராண் மாவட்டத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில், புகழ்பெற்ற போஜ்பூரி பாடகி நிஷா உபாத்யாய் பங்கேற்றுப் பாடினார். தனது அசத்தலான குரலால் ரசிகர்களை அவர் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தபோது, அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் நிஷாவிடம் அநாகரிகமான முறையில் கேள்வி எழுப்பினார்.அவர் நிஷாவிடம், "உங்கள் ரேட் என்ன?" என்று நேரடியாகக் கேட்டுள்ளார். இதைக் கேட்டு மேடையிலேயே கடும் கோபமடைந்த நிஷா உபாத்யாய், உடனடியாகத் தனது செருப்பைக் கழற்றி தொகுப்பாளரைத் தாக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் தடுத்த போதிலும், நிஷாவின் ஆவேசம் தணியவில்லை. தொகுப்பாளரை அவர் மேடையிலேயே கடுமையாகக் கண்டித்தார்.

What s your rate Bhojpuri singer Nisha Upadhyay hits back at host with slipper for indecent remark
Photo Credit:

செருப்படி வாங்க வைத்த வார்த்தை: இது குறித்து வெளியான தகவல்களின்படி, அந்தத் தொகுப்பாளர் நிஷா ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பளமாக (Fees) பெறுகிறார் என்றுதான் கேட்க நினைத்தாராம். ஆனால், அவசரத்தில் வார்த்தை தடிக்க "உங்கள் ரேட் என்ன?" என்று கேட்டது இவ்வளவு பெரிய கலவரத்திற்கு காரணமாக அமைந்தது தெரியவந்துள்ளது. அண்மைக் காலமாக போஜ்பூரி பொது நிகழ்ச்சிகள் வரம்பு மீறுவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

யார் இந்த நிஷா உபாத்யாய்?: 29 வயதான நிஷா, கடந்த 2016-ஆம் ஆண்டு போஜ்பூரி திரையுலகில் அறிமுகமானார். 'லே லே ஆயெ கோகா கோலா', 'நவ்கர் மந்திர', 'பியார் மே ஹோயி பத்னாமி' என இவரது பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இவர் சினிமா பாடல்கள் மட்டுமின்றி, பக்தி மற்றும் நாட்டுப்புறப் பாடல்களையும் பாடிப் புகழ் பெற்றவர். நிஷா உபாத்யாய் கடந்த 2023-ஆம் ஆண்டு ஒரு பொது நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளானார். அதில் அவரது இடது காலில் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். அந்த இக்கட்டான சூழலில் இருந்தும் மீண்டு வந்து தற்போது மீண்டும் மேடைகளில் பாடி வரும் நிஷாவிற்கு, இந்தச் சம்பவத்தில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

What s your rate Bhojpuri singer Nisha Upadhyay hits back at host with slipper for indecent remark

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X