பொதுமக்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை ஆக்கிரமித்த விவேக்!
சென்னை : பொதுமக்கள் பலரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை இன்று ஆக்கிரமித்து இருந்து நடிகர் விவேக்கின் புகைப்படங்கள்.
தொலைக்காட்சிகள், சமூகவலைத்தளப்பக்கங்கள் என எந்த திசை திரும்பினாலும் விவேகின் மரணச் செய்தி.
அவரின் மரணம் அவரது குடும்பத்தினரை மட்டும்மின்றி, அவரின் ரசிகர்களையும் தமிழ்த் திரையுலகையும் ஒரு ஆட்டம் காண வைத்துள்ளது.

வாக்கு நமது உரிமை
சமூகவலைத்தளப்பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் அவ்வப்போது பல கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்து கொள்வார். அந்த வகையில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், ஒவ்வொரு ஓட்டும் நமது உரிமை அதை நாம் விட்டுத்தரக்கூடாது, ஒரு வாக்கால் என்ன நேர்ந்துவிட போகிறது என நினைவ்வது ஜனநாயகத்துக்கு செய்யும் தீங்கு ஆளுமையை தேர்ந்தெடுப்பது நமது விரல் மை என்று ஏப்ரல் 5ந் தேதி பதிவிட்டு இருந்தார்.

பொதுமக்களுக்கு அறிவுரை
ஏப்ரல் 15ந் தேதி கொரேனா தடுப்பூசிப் போட்டுக்கொண்ட விவேக், கொரோனா தடுப்பூசி பற்றி பல வதந்திகள் வருகின்றன இதற்காகவே அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதாக கூறினார். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் பாதுகாப்பாக முகக்கவசம் அனைத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை கூறியிருந்தார்.

உயிரிழந்தார்
நடிகர் விவேக்கிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்றுக்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு எக்மோ கருவி பொருத்தப்பட்டது. ஆனால் மருத்துவர்களின் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இல்லத்தில் வைக்கப்பட்டு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

காவல்துறையினர் மரியாதை
மாலை 5 மணி அளவில் அவரின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மேட்டுக்குப்பம் மின் மாயானத்தில் 78 குண்டுகள் முழங்க காவல்துறையினரின் மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு அவரது இளையமகள் தேஜஸ்வினி இறுதிச்சடங்குகளை செய்தார். அவரது இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அவருக்கு விடை கொடுத்தனர்.

இயற்கை காதலனே
தொலைக்காட்சி, சமூகவலைத்தளப்பக்கங்களை இன்று ஆக்ரமித்து இருந்தது விவேக்கின் மரணச் செய்தி. பொதுமக்கள் பலரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் புகுந்து தங்கள் வீட்டில் விவேக்கும் ஒருவராகிக் போனார். நேற்று நம்மோடு பேசியவர் இன்று இல்லை என்ற இல்லாமையை அவ்வளவு எளிதில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சமூக ஆர்வலரை இழந்து விட்ட வேதனையில் அனைவரின் முகத்திலும் சோகம் குடிகொண்டு இருக்கிறது. மீண்டும் உன்னை எப்போது கண்போம் என் சின்னக்கலைவாணரே என மனமின்றி பிரியாவிடை கொடுக்கிறோம். போய்வா... என்அருமை இயற்கை காதலனே...


Click it and Unblock the Notifications











