twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீபிகா படுகோனே வாட்ஸ்அப் தகவல்கள் எப்படி கசிந்தது? வாய்ப்பே இல்லை என மறுக்கும் வாட்ஸ்அப் நிறுவனம்!

    |

    மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு விசாரணை மற்றும் பாலிவுட்டில் புழங்கும் போதைப் பொருள் விவகாரம் என அனைத்து விசாரணைக்கும் ஆதாரமாக இருப்பது வாட்ஸ்அப் தகவல்கள் தான்.

    வாட்ஸ்அப் தகவல்கள் கசிந்ததாகவும், பழைய வாட்ஸ்அப் சாட்களை பேக்கப் எடுத்தும் கண்டுபிடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    ஆனால், பாதுகாப்பு அம்சங்களில் எந்தவொரு குறைபாடும் இல்லை என்றும், வாட்ஸ்அப் தகவல்களை அப்படி ஹேக் செய்ய முடியாது என்றும் லீக் ஆகாது என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் கூறியிருக்கிறது.

     இரட்டை குழந்தைகளைப் பெற்றாரா..? வேகமாக பரவிய செய்தி.. அவசரமாக மறுத்த பிரபல நடிகை! இரட்டை குழந்தைகளைப் பெற்றாரா..? வேகமாக பரவிய செய்தி.. அவசரமாக மறுத்த பிரபல நடிகை!

    தீவிர விசாரணை

    தீவிர விசாரணை

    மறைந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் மர்மம் இருப்பதாகக் கூறி கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக தற்போது அந்த வழக்கை சிபிஐ மற்றும் என்சிபி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மும்பை போலீசார் வெறும் தற்கொலை என அவசர அவசரமாக மூடிய வழக்கை எடுத்து விசாரித்தால், ஏகப்பட்ட பூதங்கள் கிளம்பி வருகின்றன.

    நடிகை ரியா கைது

    நடிகை ரியா கைது

    சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண விசாரணை தொடர்பாக அமலாக்கத் துறையிடம் நடிகை ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் சோவிக் சவுத்ரி ஆஜராகினர். சோவிக் சக்கரவர்த்தியை விசாரணை செய்த போது, போதைப் பொருள் தொடர்பான தகவல்கள் சிக்கிய நிலையில், இந்த மரண விசாரணையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவான என்சிபி அதிகாரிகள் ஈடுபட்டனர். அதன் விளைவாக நடிகை ரியா சக்கரவர்த்தி மற்றும் சோவிக் கைது செய்யப்பட்டனர்.

    என்சிபி ரேடார் வலையில் நடிகைகள்

    என்சிபி ரேடார் வலையில் நடிகைகள்

    ரியா சக்கரவர்த்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்காகத் தான் போதைப் பொருள் வாங்கினேன் என்றும், போதைப் பொருள் பார்ட்டியில் சில நடிகைகள் கலந்து கொண்டதாக தெரிவித்தார் என்ற தகவல்கள் கசிந்தன. பின்னர், என்சிபி ரேடார் வலையில் பிரபல நடிகைகளான ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் சிக்கினர்.

    சிக்க வைத்த வாட்ஸ்அப்

    சிக்க வைத்த வாட்ஸ்அப்

    பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே தனது மேனேஜர் கரிஷ்மா பிரகாஷிடம் ‘மால்' (போதைப் பொருள்) இருப்பதாக கோடு வேர்டுகளை பயன்படுத்தி வாட்ஸ்அப் செய்துள்ள தகவல்களை வைத்துத் தான் தற்போது அவருக்கும் அவரது மேனேஜருக்கும் NCB சம்மன் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

    சுஷாந்த் சிங் மேனேஜர் ஜெயா சாஹா

    சுஷாந்த் சிங் மேனேஜர் ஜெயா சாஹா

    சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் டேலன்ட் மேனேஜர் ஜெயா சாஹாவின் செல்போனை கைப்பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் தான் போதைப் பொருள் விவகாரம் வெளியாகி உள்ளதாகவும், ஜெயா சாஹாவின் வாட்ஸ்அப் தகவல்கள் மூலமாகத்தான் மற்ற பிரபல நடிகைகள் இந்த விவகாரத்தில் சிக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கசிய வாய்ப்பில்லை

    கசிய வாய்ப்பில்லை

    ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவன அதிகாரிகள், End to End encryption உள்ள நிலையில், வாட்ஸ்அப் உரையாடல்களை சம்பந்தப்பட்ட இருவரை தவிர வேறு யாரும் ஹேக் செய்யவோ, பேக்கப் எடுக்கவோ முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளனர். எந்தவொரு வாட்ஸ்அப் மெசேஜ்களும் கசிய வாய்ப்பில்லை என்றும், வாட்ஸ்அப்பால் கூட பயனாளர்களின் தகவலை பெற முடியாது என்றும் உறுதியாக கூறியுள்ளனர்.

    தகவல்கள் கிடைத்தது எப்படி

    தகவல்கள் கிடைத்தது எப்படி

    ஆனால், என்சிபி அதிகாரிகளுக்கு இந்த வாட்ஸ்அப் தகவல்கள் எப்படி கிடைத்தது என்கிற மிகப்பெரிய கேள்வியும் எழுந்துள்ளது. ஸ்மார்ட் போனில் உள்ள க்ளோனிங் ஆப்ஷனை பயன்படுத்தி, மற்றொரு வாட்ஸ்அப் பிரதி எடுத்து, அவர்கள் சேமித்து வைத்த பழைய வாட்ஸ்அப் பேக்கப்களை எடுக்க முடியும் என்றும் கூறுகின்றனர். அப்படித் தான் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் 2017ம் ஆண்டு தீபிகா செய்த வாட்ஸ்அப் சாட்களை கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    தீபிகாவிடம் விசாரணை

    தீபிகாவிடம் விசாரணை

    தனது கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் உடன் கோவாவுக்கு விளம்பர ஷூட்டிங்கிற்காக சென்றிருந்த நடிகை தீபிகா படுகோனே, என்சிபி சம்மன் வந்த உடன் நேற்று இரவு கோவாவில் இருந்து மும்பை புறப்பட்டார். நாளை (சனிக்கிழமை) என்சிபி அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக ஆஜர் ஆக உள்ளார்.

    ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான்

    ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான்

    போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சம்மனை ஏற்றுக் கொண்ட நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் என்சிபி அதிகாரிகள் முன்பு இன்று விசாரணைக்கு ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட நடிகைகளும் இன்று அல்லது நாளைக்குள் ஆஜர் ஆவார்கள் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    வாயடைத்து போன பிரபலங்கள்

    வாயடைத்து போன பிரபலங்கள்

    ஆனால், இத்தனை பெரிய பிரச்சனையிலும் எந்தவொரு முன்னணி நடிகர்களும் இது தொடர்பாக எந்தவொரு அறிக்கையையும் ட்வீட்டையும் யாருக்கும் ஆதரவாக போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரச்சனை எங்கே போய் முடிகிறது? என்னதான் நடக்கிறது என்பதை அமிதாப் பச்சன் முதல் கான் நடிகர்கள் வரை மெளனியாக இருந்து பார்த்து வருவதையும் பாலிவுட் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

    English summary
    Social network platform WhatsApp on Thursday said that its messages are protected and no third party can access them.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X