என்னை பற்றி கண்டபடி வதந்தி பரப்புவதற்கு வாட்ஸ் அப் குரூப்.. பிரபல பின்னணி பாடகி பரபரப்பு புகார்!

By

ஐதராபாத்: தன்னை பற்றி வதந்தி பரப்புவதற்காகவே சிலர் வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி உள்ளதாக பிரபல பாடகி தெரிவித்துள்ளார்.

Recommended Video

Musical Day | Aiswarya Dutta | Bhavana | Singer Soundarya | Lock Down

பிரபல தெலுங்கு பின்னணி பாடகி, சுனிதா. ஏராளமான பாடல்களை பாடியுள்ள இவர், டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் நடிகையாகவும் இருக்கிறார்.

பல நடிகைகளுக்கு டப்பிங்கும் பேசி வருகிறார். இவர் தமிழிலும் பல பாடல்களை பாடியுள்ளார்.

திருமணம்

திருமணம்

இளையாராஜா இசையில் சில பாடல்களை பாடியுள்ள அனிதா, விஜய்யின் பத்ரி படத்தில் இடம்பெறும் காதல் சொல்வது உட்பட பல படங்களில் பாடல்கள் பாடி இருக்கிறார். சிறுவயதிலேயே திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான இவர், பின்னர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொண்டார். இவர் மகள் ஷ்ரேயாவும் பாடகியாக இருக்கிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தனிப்பட்ட வாழ்க்கை

மகனும் வளர்ந்துவிட்டதால் இப்போது அதிக கவலையின்றி இருக்கிறார். ஆனால், பாடகி சுனிதா பற்றி அடிக்கடி கிசு கிசு வருவது வழக்கம். இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்றும் அவரை காதலிக்கிறார், இவரைக் காதலிக்கிறார் என்று வதந்திகளும் வந்துபோகும். இந்நிலையில் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி வந்துள்ள வதந்திகள் பற்றி அவர் உருக்கமாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

பரிதாபமாக

பரிதாபமாக

அதில் அவர் கூறியிருப்பதாவது: எந்த காரணமும் இல்லாமல் என்னை எளிதாக குறிவைத்து பேசுவதை பார்த்திருக்கிறேன். ஜூனியர் பாடகர்கள் என்னைப் பரிதாபமாக பின்பற்றுவதையும் அதற்கு ரசிகர்கள் கைதட்டுவதையும் பார்த்திருக்கிறேன். என்னைப் பற்றி வதந்தி பரப்புவதற்காக மட்டுமே, வாட்ஸ் அப் குரூப் தொடங்கப்பட்டு இருப்பதை பார்த்திருக்கிறேன்.

வாழ்க்கையை

வாழ்க்கையை

என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி சில பெண்கள் வதந்தி பரப்புவதைப் பார்த்திருக் கிறேன். ஆணாதிக்கம் நிறைந்த இந்தச் சமூகத்தில் தனி மனுஷியாக குழந்தைகளை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நேரடியாகக் கண்டிருக்கிறேன். இதை எல்லாவற்றையும் விட, நான் வாழ்க்கையை பார்த்திருக்கிறேன்.

அமைதியான ரசிகர்கள்

அமைதியான ரசிகர்கள்

இந்த விஷயங்கள் என்னையும் என் குடும்பத்தையும் பாதித்துவிடாதபடி, எனது அமைதியான ரசிகர்கள் என் பணியை ரசித்து நினைவூட்டியபடி இருக்கின்றனர்' என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவை ஏராளமானோர் ஷேர் செய்துள்ளனர். பலர் லைக் செய்துள்ளனர். அவருக்கு நம்பிக்கைத் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X