ப்பா.. போஸ்டரே வெறித்தனமா இருக்கு.. விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி இருக்கப் போகுதோ?
சென்னை: கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான "பத்தல பத்தல" பாடல் இன்று வெளியாகிறது.
அது தொடர்பாக அந்த பாடலின் புதிய போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் ஷேர் செய்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.
விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் விரைவில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கலக்கும் கமல்
வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் "கலக்கப் போவது யாரு" என அட்டகாசமான இன்ட்ரோ பாடல் இடம்பெற்றிருக்கும். கிட்டத்தட்ட அதே போன்ற வைப்புடன் தற்போது விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வயதிலும் செம எனர்ஜியாக நடனம் ஆடப் போகும் கமலை காணவே ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபர்ஸ்ட் சிங்கிள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான பத்தல பத்தல பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக உள்ள அறிவிப்பை தற்போது கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

போஸ்டரே மிரட்டுதே
சட்டையை கழட்டி கழுத்தில் சுற்றிக் கொண்டு கைகளில் பிடித்தபடி டிசர்ட், ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கூலர்ஸ் மாட்டிக் கொண்டு செம ஸ்வாக் ஆன ஸ்டைல் உடன் இறங்கி குத்தும் ஸ்டெப்புடன் நடிகர் கமல் இருக்கும் இந்த போஸ்டரே மிரட்டுதே என ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்து வருகின்றனர். அனிருத் கமலுக்கு தரமான சம்பவத்தை செய்துள்ளார் என கொண்டாடி வருகின்றனர்.

ஆடியோ லாஞ்ச்
வரும் மே 15ம் தேதி விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற போகிறது. நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பல சினிமா பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்திய திரையுலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு அந்த நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

சூர்யா நடிக்கிறாரா
ஏற்கனவே நடிகர் அமிதாப் பச்சன் கேமியோ செய்துள்ளார் விக்ரம் படத்தில் என்கிற தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நடிகர் சூர்யாவும் ஒரு சிறப்பான கேமியோவாக விக்ரம் படத்தில் இடம்பெற உள்ளார் என்கிற தகவல் தொடர்ந்து சில நாட்களாகவே வெளியாகி வருகின்றன. விக்ரம் படத்தை முடித்த பின்னர் மீண்டும் விஜய்யுடன் ஒரு படத்தை பண்ண உள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க போகிறார். கைதி படத்திற்கே முதலில் சூர்யா தான் லோகேஷ் கனகராஜின் தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











