விஸ்வரூபம் 3ஆம் பாகம் வருமா? என்ன சொல்கிறார் நடிகர் கமல்?

விஸ்வரூபம் 3 ஆம் பாகம் வருவதும் வராததும் ரசிகர்கள் கையில் தான் உள்ளது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை: விஸ்வரூபம் 3 ஆம் பாகம் வருவதும் வராததும் ரசிகர்கள் கையில் தான் உள்ளது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். தொகுதி வாரியாக நிர்வாகிகளையும் நியமித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

அதே நேரத்தில் சினிமா, பிக்பாஸ் சீசன் 2 என தொழில் ரீதியாகவும் பிஸியாக உள்ளார் நடிகர் கமல்ஹாசன். இந்நிலையில் கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள விஸ்வரூபம் - 2 படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு

இதற்கான இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில் விஸ்வரூபம் - 2 திரைப்படம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

முதல் பாகத்தின் தொடர்ச்சி

முதல் பாகத்தின் தொடர்ச்சி

அப்போது அவர் பேசியதாவது, விஸ்வரூபம் முதலாம் பாகத்தின் தொடர்ச்சியாக ‘விஸ்வரூபம்-2' படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முயற்சித்து இருக்கிறோம்.

எனக்கு வருத்தம் உண்டு

எனக்கு வருத்தம் உண்டு

இது, அரசியலுக்கு அப்பாற்பட்ட படம். இந்தியா-பாகிஸ்தான் இரண்டாக பிரிந்து கிடப்பதற்கு மத அரசியல் ஒரு காரணம். அதில் எனக்கு வருத்தம் உண்டு. அதன் அடிநாதம்தான் விஸ்வரூபம்-2.

பெரிய எதிர்பார்ப்பு

பெரிய எதிர்பார்ப்பு

‘விஸ்வரூபம்-2' படத்தில், நான் காஷ்மீர் இந்தியா முஸ்லீமாக நடித்து இருக்கிறேன். படம் தாமதமானதில் வருத்தம் இருக்கிறது. என்றாலும், படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

யுஏ சான்றிதழ்

யுஏ சான்றிதழ்

படத்தில், அரசியல் தொடர்பான வசனங்களை சேர்க்கவில்லை. படம் தணிக்கை செய்யப்பட்டு விட்டது. ‘யு ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது.

விஸ்வரூபம் 3 வருமா?

விஸ்வரூபம் 3 வருமா?

நான், அரசியலுக்கு வரும் முன் படத்தை எடுத்து முடித்து விட்டேன். அமெரிக்காவுக்கு ஆதரவாக படத்தை எடுக்கவில்லை. இந்த படத்தின் மூன்றாம் பாகம் எடுப்பதும், எடுக்காததும் ரசிகர்கள் படத்துக்கு கொடுக்கும் வரவேற்பை பொருத்து அமையும். இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X