கண்ணீர் விட்டு அழுத அஜித் மகன் ஆத்விக்.. இறுக்கமாக கட்டிபிடிச்சு ஒரே எமோஷனல்.. தைரியம் சொன்ன அஜித்

சென்னை: அஜித் தற்போது ஆசிய அளவிலான கார் ரேஸ் பந்தயமான ஆசியன் லீ மேன்ஸ் சீரிஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இன்று அதாவது டிசம்பர் 14ஆம் தேதி பந்தயம் நடைபெற்று வருவதால் கார் பந்தயத்தை காணச் சென்ற ரசிகர்கள் அஜித்தை வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதில் ரசிகர்கள் பலரையும் கொஞ்சம் எமோஷனல் ஆகியுள்ள வீடியோ என்றால் அது, அஜித் மகன் ஆத்விக் அஜித்தை இறுக்கமாக கட்டிப்பிடித்து அழுத வீடியோ தான். தனது மகனை இருக்கமாக கட்டிப் பிடித்த அஜித், அதன் பின்னர் ஆத்விக்கை அழுக வேண்டாம் என்று தைரியம் கூறுகிறார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் மிகவும் எமோஷனலாக கமெண்ட் செய்தும் பகிர்ந்தும் வருகிறார்கள்.

When Ajithkumar Son Aadvik Got Emotional AK Hugged And Gently Calmed Him Down - Watch

அதாவது, நடிகர் அஜித் குமாரின் அஜித் குமார் ரேஸிங் அணியும் இந்தியாவின் தலைசிறந்த கார் ரேஸர்களில் ஒருவரான நரைன் கார்த்திகேயன் அணியும் இணைந்து இந்த ஆண்டுக்கான ஆசியன் லீ மேன்ஸ் சீரிஸில் பங்கு பெற்று வருகிறார்கள். இந்த பந்தயம் மலேசியாவில் நடப்பதால், மலேசியாவில் வசிக்கும் தமிழர்களும் அஜித் ரசிகர்களும் அஜித்தை பார்க்க கூடினார்கள்.

அஜித் குமார் ரசிகர்கள்: அப்போது ரசிகர்கள் பலரும் அஜித்தை வீடியோ எடுத்தார்கள், அஜித்தைப் பார்த்ததும் தல, ஏ.கே என்று எல்லாம் கூச்சலிட்டு அழைத்தார்கள். ரசிகர்களின் இந்த ஆரவாரம் அஜித்தின் காதுகளில் விழுந்தால் உடனே அஜித்தும் ரசிகர்களை நோக்கி கை அசைத்தும், பறக்கும் முத்தங்களை வாரி வழங்கியும் வருகிறார். இப்படி இருக்கும்போது அஜித் தனது மனைவி ஷாலினிக்கு முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

எமோஷனல் வீடியோ: இதைப் பார்த்தே அஜித் ரசிகர்கள் காதல் மன்னன் என்றால் சும்மாவா என்று ஜாலியாக கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதேபோல் தற்போது மற்றொரு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது அஜித் ரேஸ்க்கு தயாராகி காருக்கு அருகில் நிற்கிறார். அப்போது அங்கு வந்த அஜித்தின் மனைவி ஷாலினியும் அவரது மகன் ஆத்விக்கும் அஜித்துக்கு வாழ்த்துகள் கூறுகிறார்கள். அதன் பின்னர், மகன் ஆத்விக் அஜித்தை இறுக்கமாக கட்டிப்பிடித்து அழுத வீடியோ தான். தனது மகனை இருக்கமாக கட்டிப் பிடித்த அஜித், அதன் பின்னர் ஆத்விக்கை அழுக வேண்டாம் என்று தைரியம் கூறுகிறார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் மிகவும் எமோஷனலாக கமெண்ட் செய்தும் பகிர்ந்தும் வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X