ஒரேயொரு கேள்வி கேட்ட நடிகை: ஓங்கி அறையட்டுமான்னு சொன்ன ஹீரோ

By Siva

மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபை பார்த்து அறை வேண்டுமா என்று நடிகர் அக்ஷய் குமார் கேட்டுள்ளார்.

கத்ரீனா கைஃபும், அக்ஷய் குமாரும் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளனர். அவர்களின் ரீல் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் ரோஹித் ஷெட்டியின் சூர்யவன்ஷி படத்தில் அக்கியும், கத்ரீனாவும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் கத்ரீனா டிவி நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது,

ராக்கி

ராக்கி

நான் தீஸ் மார் கான் படத்தில் ஷீலா கி ஜவானி பாடலுக்கு டான்ஸ் ஆட தயாராகி அமர்ந்திருந்தேன். அப்பொழுது அனைவரும் ராக்கி கட்டுவது பற்றி பேசியதை கேட்டேன். ஏன் யாருமே எனக்கு ராக்கி கட்டவில்லை என்று நினைத்தேன்.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

அந்த இடத்தில் யாருமே எனக்கு ராக்கி கட்டவில்லை, யாருமே என்னை கண்டுகொள்ளவில்லை. அந்த நேரம் ஒருவர் வந்தார். அவர் தான் என் நல்ல நண்பர் அக்ஷய் குமார். அவரை பார்த்ததும் நான் உங்களுக்கு ராக்கி கட்டவா என்று கேட்டேன். நான் ராக்கி கட்டவா என்று கேட்டதும் அறை வேண்டுமா என்று அக்ஷய் பதிலுக்கு கேட்டார்.

சல்மான் கான்

சல்மான் கான்

சல்மான் கான் அவரை நான் அண்ணா என்று அழைக்க அனுமதிப்பது இல்லை. அவர் என் அண்ணன் இல்லை அதனால் தான் அனுமதிப்பது இல்லை. நானும், அக்ஷய் குமாரும் நல்ல நண்பர்கள் அதனால் தான் அவர் ராக்கி கட்டவிடவில்லை.

சூர்யவன்ஷி

சூர்யவன்ஷி

சூர்யவன்ஷி படத்தில் அக்ஷய் குமாருடன் சேர்ந்து நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. 9 ஆண்டுகள் கழித்து நானும் அக்கியும் சேர்ந்து நடிக்கிறோம். ஏற்கனவே படப்பிடிப்பு துவங்கிவிட்டது என்று கத்ரீனா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X