இரவு 3 மணிக்கு காதலர் வீட்டில் இருந்து கிளம்பியபோது குடிகாரரிடம் சிக்கிய நடிகை
மும்பை: காதலர் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு 3 மணிக்கு வீடு திரும்பியபோது நடிகை ஆலியா பட் குடிகாரரிடம் சிக்கிக் கொண்டார்.
பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வருகிறார்கள். இடையில் பிரிந்துவிட்ட அவர்கள் தற்போது மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டனர்.
இந்நிலையில் ஆலியா தனது காதலரை பார்க்க அவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

சித்தார்த்
ஆலியா இரவு நேரத்தில் சித்தார்த்தின் வீட்டிற்கு சென்றுள்ளார். 3 மணி அளவில் தனது வீட்டிற்கு கிளம்ப ஆலியா தனது பாடிகார்டுக்கு போன் செய்ய அவர் எடுக்கவில்லை.

பாடிகார்ட்
ஆலியா திரும்பத் திரும்ப பாடிகார்டுக்கு போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. சிறிது நேரம் கழித்து போனை எடுத்த பாடிகார்ட் காரில் ஆலியாவுக்கு பக்கத்தில் அமர்ந்துள்ளார்.

குடி
பாடிகார்டு தனது அருகில் அமர்ந்த பிறகு தான் அவர் குடிபோதையில் இருப்பது ஆலியாவுக்கு தெரிய வந்தது. இந்த ஆளுடன் பேசினால் விவகாரமாகிவிடும் என்று ஆலியா பயத்திலேயே இருந்துள்ளார்.

ஆலியா
வீட்டிற்கு சென்ற பிறகு ஆலியா நடந்ததை தனது தாயிடம் கூறியுள்ளார். அவரது அம்மா பயந்துபோய் பாடிகார்டை பணியில் இருந்து நீக்கிவிட்டார்.


Click it and Unblock the Notifications











