நல்லா இருக்கும் நடிகையின் குடும்பத்தில் குண்டை தூக்கிப் போட்ட இயக்குநர்

By Siva

மும்பை: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் அம்மாவுக்கு பேரதிர்ச்சி அளித்துவிட்டார் இயக்குநர் அனுராக் பாசு.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சூப்பர் டான்ஸர் 3 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக உள்ளார். இயக்குநர் அனுராக் பாசு மற்றும் டான்ஸ் மாஸ்டர் கீதா கபூர் ஆகியோரும் நடுவர்களாக உள்ளனர்.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் போது அனுராக் பாசு ஷில்பாவுக்கு தெரியாமல் ஒரு காரியம் செய்தார்.

ஷில்பா

ஷில்பா

ஷில்பா இல்லாத நேரத்தில் அவரின் செல்போனை எடுத்து அவரின் அம்மாவுக்கு அனுராக் பாசு மெசேஜ் ஒன்றை அனுப்பினார். ஷில்பாவுக்கும், அவரின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கும் இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டு அவர்கள் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அந்த மெசேஜில் அனுராக் குறிப்பிட்டார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அனுராக் செய்த சேட்டை குறித்து கீதா ஷில்பாவிடம் தெரிவித்தார். இதை கேட்டு பதறிப் போன ஷில்பா உடனே தனது அம்மாவுக்கு போன் செய்து நான் விவாகரத்து பெறுகிறேன் என்றோ, கர்ப்பமாக இருக்கிறேன் என்றோ என்னை தவிர வேறு யார் கூறினாலும் நம்பாதீர்கள். உங்களுக்கு வந்த மெசேஜை நான் அல்ல மாறாக அனுராக் பாசு அனுப்பினார். விவாகரத்து எல்லாம் பெறவில்லை, பயப்பட வேண்டாம் என்று ஷில்பா தனது தாயிடம் தெரிவித்தார்.

கர்ப்பம்

கர்ப்பம்

ஷில்பா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக பொய் சொல்லி அவரின் தங்கையும், நடிகையுமான ஷமிதா ஷெட்டியை நம்ப வைத்தார் அனுராக் பாசு என்பது குறிப்பிடத்தக்கது.

அனுராக்

அனுராக்

ஷில்பா ஷெட்டியும், ராஜ் குந்த்ராவும் பாசமாக உள்ளார்கள். இருப்பினும் அவர்களுக்கு இடையே பிரச்சனை என்று கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தான் அனுராக் பாசு இப்படி செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X