Don't Miss!
- News
"நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்" - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
- Automobiles
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Lifestyle
வெஜ் சால்னா
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
“அஜித் கூட எப்ப படம் பண்ண போறீங்க..? விரைவில் சொல்றேன்…”: குருதி ஆட்டம் டைரக்டரோட அடுத்த ப்ளான்?
சென்னை: அதர்வா நடித்துள்ள 'குருதி ஆட்டம்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
8 தோட்டாக்கள் படம் மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீ கணேஷ் 'குருதி ஆட்டம்' படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஸ்ரீ கணேஷ், அஜித் படத்தை இயக்குவது குறித்து மாஸ் அப்டேட் ஒன்று கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6 எப்ப துவங்குது தெரியுமா.. பாக்கலாம் வாங்க!

கவனிக்க வைத்த 8 தோட்டாக்கள்
விவாதத்துக்குரிய சிந்தனைகளுடன் புதிய கதைகளை திரைப்படங்களாக்கும் புதிய இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வருகின்றனர். இயக்குநர் ஸ்ரீ கணேஷும் அப்படித்தான். அவர் இயக்கிய முதல் படமான '8 தோட்டாக்கள்' பலரையும் கவனிக்க வைத்தது. வெற்றி ஹீரோவாக இன்ட்ரோவான இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, மீரா மிதுன், நாசர், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அதர்வாவுடன் குருதி ஆட்டம்
'8 தோட்டாக்கள்' படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால், பல முன்னணி நடிகர்களின் பார்வையும் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் மீது விழுந்தது. ஆனாலும், அவர் அதர்வாவுடன் 'குருதி ஆட்டம்' படத்தில் இணைந்தார். அதர்வா, ராதிகா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ளது. மேலும், இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்று வருகிறது.

ரசிகர்களுடன் கலந்துரையாடல்
இதனிடையே 'குருதி ஆட்டம்' படம் குறித்து, இயக்குநர் ஸ்ரீ கணேஷ் ரசிகர்களுடன் இணையத்தில் கலந்துரையாடினார். அப்போது அவர்களின் கேள்விகள் அனைத்துக்கும் ஸ்ரீ கணேஷ் பதில் கூறினார். திரைப்படத்தின் மீதான காதல், '8 தோட்டாக்கள்', 'குருதி ஆட்டம்' படங்கள் இயக்கியதன் பின்னணி என பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துகொண்டார்.

சூப்பர் கேள்வியும் அசத்தலான பதிலும்
தொடர்ந்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து கொண்டிருந்தார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். அப்போது ரசிகர்கள் சிலர், "அஜித்துடன் எப்போது இணைவீர்கள், அவருக்கு கதை ரெடியாக உள்ளதா?, அஜித் படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வருகிறதே?" எனக் கேட்டனர். இந்த கேள்வியை கேட்டதுமே மகிழ்ச்சியான ஸ்ரீ கணேஷ், "இந்த வார்த்தைகளுக்கு ரொம்பவே நன்றி!, இப்போதைக்கு என்னால் எதுவும் கூற முடியாது, விரைவில் அஜித்துடன் இணையும் படம் குறித்து அறிவிக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.