"நாலு மிடுக்கன்களும்.. நச்சுன்னு ஒரு பேச்சும்"... ஒன்னு கூடிய மலையாள நடிகர்கள்.. ஒரே ஜாலிதான்!

திருவனந்தபுரம் : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. பலரும் கொரோனா பீதியில் உள்ள நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன.

சின்னத்திரை படப்பிடிப்புக்களும் நிறுத்தப்பட்டு, மறு உத்தரவு வரும் வரை இதே நிலை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைப்பிரலங்கள் பலரும் சமூக வலைதளங்களில், தாங்கள் லாக்டவுனில் என்ன செய்கிறோம் என பதிவிட்டு வருகின்றனர்.

ஒன்று கூடிய நண்பர்கள்

ஒன்று கூடிய நண்பர்கள்

அந்த வகையில் மலையாள திரையுலக நட்சத்திரங்கள் பலவும் வீட்டில் மீண்டும் ஓய்வெடுத்து வருகின்றனர். இந்த ஆண்டும் மலையாள நடிகர்கள் ப்ருத்விராஜ், நரேன், ஜெயசூர்யா, இந்திரஜித் சுகுமாறன் ஆகியோர் வீடியோ கான்ஃபிரசிங்கில் ஒன்றிணைந்து தங்கள் கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்துள்ளனர்.

ஸ்கிரீன்ஷாட் வெளியீடு

ஸ்கிரீன்ஷாட் வெளியீடு

இந்த வீடியோ உரையாடலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ப்ருத்விராஜ், இந்திரஜித், ஜெயசூர்யா ஆகியோர் தங்களின் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். அத்துடன், கடந்த ஆண்டு லாக்டவுனிலும் இதே போன்ற ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டோம். ஒரு சின்ன வித்தியாசம் என்னவென்றால் இந்த ஆண்டு அதிர்ஷ்டவசமாக வீட்டில் குடும்பத்துடன் இருக்கிறோம்.

அடுத்த முறை நிலைமை மாறும்

அடுத்த முறை நிலைமை மாறும்

கடந்த ஆண்டு பாலைவனத்தில் மாட்டிக் கொண்டோம். கடந்த ஆண்டும் இதே போல் கொரோனாவுடன் இந்தியா போராடிக் கொண்டிருந்தது. இந்த சமயத்தில் இப்படி ஒன்று கூடி உள்ளதை என்ஜாய் செய்கிறோம். அடுத்த முறை இந்த நிலைமை மாறி இருக்கும் என நம்புகிறோம். அப்போது நிஜத்தில் இதே போல் ஒன்று கூடுவோம். வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளனர்.

வைரலான ஃபோட்டோ

வைரலான ஃபோட்டோ

இந்த 4 நண்பர்களும் சிரித்துக் கொண்டிருக்கும் ஸ்கீரின் ஷாட்டை ப்ருத்விராஜ், நரேன் வெளியிட்டுள்ளனர். இந்த 4 கல்லூரி கால தோழர்களின் ஃபோட்டோக்கள், ஸ்கிரீன்ஷாட்களை கடந்த ஆண்டு அவர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கினர்.

குவியும் பாராட்டுக்கள்

குவியும் பாராட்டுக்கள்

இந்த ஆண்டு ரசிகர்கள் மட்டுமின்றி பல சக நடிகர்களும் இதை பாராட்டி உள்ளனர். தாங்கள் தங்களின் பழைய நண்பர்களுடன் இப்படி தொடர்பு கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். இவர்கள் 4 பேரும் 1991 ல் ஒன்றாக படித்தவர்கள். கல்லூரி நண்பர்களான ப்ருத்விராஜ், இந்திரஜித், ஜெயசூர்யா, நரேன், காவ்யா மாதவன், ராதிகா ஆகியோர் இணைந்து மலையாளத்தில் 2006 ல் நடித்த கிளாஸ்மெட்ஸ் படம் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X