யோவ் பெரிய மனுசா, உன்கிட்ட போய் கேட்டேன் பாரு: வெங்கட் பிரபு மீது ரசிகை கோபம்
Recommended Video

சென்னை: இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் மிரட்டி பிறந்தநாள் வாழ்த்து பெற்றுள்ளார் ரசிகை ஒருவர்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரசிகை ஒருவரால் இயக்குனர் வெங்கட் பிரபுவின் ட்விட்டர் கணக்கில் கலவரமாக உள்ளது. காரணம் அந்த ரசிகை தனக்கு வாழ்த்து கூறுமாறு வெங்கட் பிரபுவிடம் முதலில் அன்புடன் கேட்டார்.
வெங்கட் பிரபு கண்டுகொள்ளாததால் பின்னர் மிரட்டிக் கேட்டார்.
ரசிகை
அன்பாக கேட்டும் வாழ்த்தாத வெங்கட் பிரபு மீது கோபப்பட்ட ரசிகை உன்கிட்ட போய் கேட்டேன் பாரு என்று கடுப்பாகி ட்வீட்டினார். அந்த கடுப்பு ட்வீட் தான் வெங்கட் பிரபு கண்ணில் பட்டது.
வெங்கட் பிரபு
ரசிகையின் மிரட்டில் ட்வீட்டை பார்த்த வெங்கட் பிரபு, பிறந்தநாள் வாழ்த்துகள் ப்ரோ(ப்ரோவா?), சாரி உங்களின் முதல் ட்வீட்டை பார்க்கவில்லை. அதுக்குள்ள திட்றீங்களே.. உங்க மனசு போல இல்லாம உண்மையிலேயே சந்தோஷமா இருங்க, வாழ்த்துக்கள் என்று வாழ்த்தினார்.
விமர்சனம்
பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லச் சொன்னால் இப்படித் தான் நக்கலா வாழ்த்துவதா என்று சிலர் வெங்கட் பிரபு மீது கோபம் கொண்டுள்ளனர்.
நல்ல மனசு
வாழ்த்து கேட்டு குட்டு வாங்கிய ரசிகையோ எனக்கு நல்ல மனசு தான் என்று பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











