போட்டோ எடுத்துவிட்டு கன்னத்தில் அறைந்த ரசிகை: பிரபாஸ் என்ன செய்தார் தெரியுமா?
Recommended Video

லாஸ் ஏஞ்சல்ஸ்: விமான நிலையத்தில் பிரபாஸுடன் புகைப்படம் எடுத்த ரசிகை ஒருவர் அவரை கன்னத்தில் அறைந்துள்ளார்.
பிரபாஸ் தற்போது சாஹோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸாக உள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரபாஸ்
சாஹோ பட வேலை தொடர்பாக பிரபாஸ் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றார். விமான நிலையித்தில் அவரை பார்த்த ரசிகை ஒருவர் ஓடி வந்து புகைப்படம் எடுத்ததுடன் அவரை கன்னத்தில் செல்லமாக அறைந்துவிட்டு சென்றார்.

கன்னம்
ரசிகை இப்படி ஆர்வக்கோளாறில் அறைவார் என்பதை பிரபாஸ் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் கன்னத்தை தடவிவிட்டு சிரித்து சமாளித்தார். அவர் கோபப்படாமல் இருந்தது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மகிழ்ச்சி
பிரபாஸ் ஏதோ நல்ல மனுஷனாக இருக்கப் போய் சும்மாவிட்டுவிட்டார். அந்த ரசிகை அறைந்த வீடியோவை பார்த்த ரசிகைகள் சிலர் நாங்களாக இருந்தால் பிரபாஸின் கன்னத்தில் முத்தம் கொடுத்திருப்போம் என்கிறார்கள்.

திட்டு
லூசாம்மா நீ, பிரபாஸின் கன்னத்தில் அறைந்திருக்கிறாய் என்று சில ரசிகைகள் கொந்தளிக்கவும் செய்துள்ளனர். பாகுபலி படத்திற்கு பிரபாஸுக்கு ஏகப்பட்ட ரசிகைகள் கிடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











