»   »  கவுதமியை மனதில் வைத்து தான் ஸ்ருதி 'இப்படி' ட்விட்டரில் கூறியுள்ளாரா?

கவுதமியை மனதில் வைத்து தான் ஸ்ருதி 'இப்படி' ட்விட்டரில் கூறியுள்ளாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவுதமி கமல் ஹாஸனை பிரிந்துள்ள நிலையில் ஸ்ருதி ஹாஸன் தனக்குள் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நடிகை கவுதமி கமல் ஹாஸனை திருமணம் செய்யாமல் அவருடன் 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவர் கமலை பிரிவதாக ட்விட்டர் மூலம் அறிவித்தார்.

When Gautami leaves Kamal, Shruti too feels a change

கமலை பிரியும் முடிவு எடுத்ததை தன்னாலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை என்கிறார் கவுதமி. அண்மையில் கவுதமிக்கும், ஸ்ருதிக்கும் இடையே மோதலாக இருந்தது என்று கூறப்பட்ட நிலையில் கவுதமி இந்த முடிவை எடுத்துள்ளார்.

கவுதமி தன் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றி அறிவித்துள்ள நிலையில் ஸ்ருதி தனக்குள் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து ஸ்ருதி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஒருவருக்குள் ஏற்படும் மாற்றத்தை உணர்வது அருமையானது. ஒரு புதிய புரிதல், அந்த தருணம், புதிய கண்ணோட்டத்தின் துவக்கத்தை உணர்வது அருமை.

English summary
When Gautami leaves Kamal Haasan, Shruti Haasan tweeted that, 'It's amazing to feel a change occur within oneself- a realisation a moment and the start of a completely new perspective #introspect #live'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil