சிவ கார்த்திகேயனின் டான் படம் பார்த்தபோது முதலில் சிரிப்பு வரவில்லை... உதயநிதி வெளிப்படையான பேச்சு
சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படம் இந்த வார இறுதியில் வெளியாகிறது.
தொடர்ச்சியாக பல படங்களை தனது ரெட் ஜெயிண்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் விநியோகம் செய்யும் உதயநிதி கூடிய விரைவில் நடிப்பிலிருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தை விநியோகம் செய்த உதயநிதி அந்தப் படம் பார்த்த அனுபவத்தை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

டான்
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப் பெரிய பொருட்சளவில் உருவான திரைப்படம் டான். லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தார்கள். உதயநிதி உள்ளிட்ட பல கதாநாயகர்களிடம் அந்தக் கதை சென்ற பிறகு இறுதியாகத்தான் சிவ கார்த்திகேயன் நடித்திருந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விசயம். திரையரங்குகளில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்று 100 கோடிகள் வசூல் செய்தது.

ரஜினிகாந்த் பாராட்டு
சிபி சக்கரவர்த்தியை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் அவரிடம் கதையும் கேட்டுள்ளார். இப்படி ஒரு பக்கம் பாராட்டுக்கள் குவிந்திருந்தாலும் ஒரு சிலர் அந்த படத்தை கலாய்த்து மீம்கள் போட்டு அதில் இருந்த கிரிஞ்ச் விசயங்களை சமூக வலைதளங்களில் பரப்பினார்கள். இருப்பினும் படத்தின் ஓட்டத்தை அது எந்த வகையிலும் பாதிக்கவில்லை. சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த்அ முந்தைய படங்களை விட அது அதிக வசூல் ஈட்டியது.

உதயநிதி வெளிப்படை
சமீபகாலமாக திரைப்படங்களின் உண்மை நிலவரத்தை வெளிப்படையாக பேசி வருகிறார் உதயநிதி. ஆர்யா நடித்திருந்த கேப்டன் படத்தை கூட விமர்சனம் செய்தார். கேப்டன் திரைப்பட இயக்குநரின் முந்தைய படங்களின் வெற்றியால் கேப்டன் படத்தை பார்க்காமலேயே விநியோகம் செய்தாராம் உதய். ஆனால் படம் சொதப்பிவிட்டது. டான் திரைப்படத்தை கூட விநியோகம் செய்வதற்கு முன்பு வீட்டில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பார்த்ததாராம்.

எதிர்பாராத வெற்றி
படம் பார்த்த அனைவரும் நகைச்சுவை எடுபடவில்லை என்று சிரிக்கவில்லையாம். கடைசி 20 நிமிடங்கள் மட்டும் நன்றாக இருந்ததாகவும், அப்போது சிவகார்த்திகேயனுக்கு ஃபோன் செய்து படத்தை ட்ரிம் செய்ய சொன்னாராம் உதய். ஆனால், சிவ கார்த்திகேயன் மேற்கொண்டு சில காட்சிகளை சேர்த்து படத்தின் நீளத்தை கூட்டி வெளியிட்டுவிட்டாராம். ஆனால், தான் நினைத்தது போல் அல்லாமல் டான் திரைப்படத்தை மக்கள் நன்றாக வரவேற்று மிகப் பெரிய வெற்றிப் படமாக ஆக்கிவிட்டார்கள் என்று வெளிப்படையாக உதயநிதி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











