நான் நடந்தாலோ, பேசினாலோ சாதனைதான்.. இளையராஜா அதிரடி.. இசைஞானி வேற லெவல் ப்பா

சென்னை: இசைஞானி இளையராஜாவுக்கு இப்போது 82 வயது ஆகிறது. இந்த வயதிலும் தன்னை இசையமைப்பதில் பிஸியாக வைத்திருக்கிறார். கடந்த வருடத்தி ஒரு சிம்பொனியை எழுதி முடித்து லண்டனில் அரங்கேற்றினார். அதனைத் தொடர்ந்து தமிழில் அவர் லெனின் பாண்டியன் படத்துக்கும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க சென்னையில் நேற்று இசை கச்சேரி நடத்தி தன்னுடைய சிம்பொனியையும் இசைத்து காட்டினார்.

இளையராஜா என்றாலே அறிமுகம் தேவையில்லை. அவரது செயல்பாடுகளை பார்க்கையில் ராஜாவுக்கு வயது ஆகுமா ஆகாதா என்ற கேள்விதான் எல்லோரிடமும் எழும். இப்போதிருக்கும் இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் இசையை கொடுக்கும் அவர்; இளம் இசையமைப்பாளர்களுக்கும் டஃப் கொடுக்கிறார். கடைசியாக அவர் இசையமைத்த ஜமா, விடுதலை 2 ஆகிய படங்களின் இசையும் வழக்கம்போல் கொண்டாடப்பட்டது. அடுத்ததாக லெனின் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

When I Walk or Speak It s a Record Ilaiyaraaja s Bold Statement Goes Viral
Photo Credit:

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்: மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் ஒரு படத்துக்கு இசையமைக்க கமிட்டாகியிருக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியானது. முக்கியமாக அந்தப் படத்துக்காக ராஜா அமைக்கும் பின்னணி இசையை மட்டும் தனியாக வெளியிடவும் படக்குழு திட்டமிட்டிருக்கிறது. அடிப்படையில் கார்த்திக் சுப்புராஜ் இளையராஜாவின் தீவிரமான ரசிகர் ஆவார். எனவே தன்னுடைய படத்தில் மிகச்சிறந்த இசையை ஞானியிடமிருந்து பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read
வேட்டுவம் படத்தை புகழும் சோபிதா துலிபாலா.. பெரிய விருந்தாக அமையுமாம்.. மேடம் ஓபன் டாக்
வேட்டுவம் படத்தை புகழும் சோபிதா துலிபாலா.. பெரிய விருந்தாக அமையுமாம்.. மேடம் ஓபன் டாக்

சிம்பொனி இளையராஜா: இதற்கிடையே சிம்பொனி எழுதுவதிலும் தன்னை பரபரப்பாக வைத்திருக்கிறார் 82 வயதான இளைஞர். கடந்த வருடத்தில்தான் லண்டனுக்கு சென்று தன்னுடைய சிம்பொனியை அரங்கேற்றிவிட்டு வந்தார். அவருக்கு பலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை முடித்த கையோடு இன்னொரு சிம்பொனியையும் அவர் எழுதிவருவதாகவும்; விரைவில் அதனையும் அரங்கேற்றுவார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர் கூறுகிறார்கள்.

சென்னையில் கச்சேரி: திரைப்படங்கள், சிம்பொனி மட்டுமின்றி இசை கச்சேரியையும் இந்த வயதில் அசால்ட்டாக நடத்துகிறார். நேற்று சென்னையில் சிம்பொனி இசைத்து காண்பித்தார். அதில் ஏராளமான ரசிகர்கள், திரையுலகத்தை சேர்ந்த பிரபலங்கள் எல்லாம் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, "இது இசை உலகத்தின் சரித்திரத்திலேயே புதிய சரித்திரம். இரண்டு புதிய கலாசாரங்கள் வித்தியாசமானது இல்லை என்பதை நிரூபிக்கும் பாடல் இது.

நான் நடந்தாலே சாதனை: சாதனைகளுக்காக, விருதுகளுக்காக காத்திருப்பவன் நான் இல்லை. நான் நடந்தாலோ, பேசினாலோ சாதனைதான்" என்றார். அவர் அப்படி பேசும்போது அங்கே கூடியிருந்தவர்கள் கை தட்டல்களால் விண்ணை அசைத்து பார்த்தார்கள். மேலும் இளையராஜாவின் கர்வமே தனி அழகுதான் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X