இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடக்கம்? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது என்பது உட்பட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.

Recommended Video

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடக்கம்? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

தமிழ் சினிமாவில் நாள்தோறும் பல்வேறு சுவாரசிய சம்பவங்களும், பல்வேறு படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது.

படத்தின் பூஜை, பாடல்கள் வெளியீடு, டீஸர், ட்ரெயிலர் என ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. அவற்றில் சுவாரசியமான தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

விமான நிலையத்தில் நடந்தது என்ன?

விமான நிலையத்தில் நடந்தது என்ன?


அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்த தகவலை கூறியுள்ளார் பிகே. விமான நிலையத்தில் தாக்கப்பட்டது விஜய் சேதுபதி அல்ல என்றும் அவருடன் வந்த மற்றொரு நடிகரான மகான் காந்திதான் என்றும் கூறியுள்ளார்.

ஒரு ரூபாய்க்கு தோசை

ஒரு ரூபாய்க்கு தோசை

இதேபோல் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் குறித்தும் சில தகவல்களை கூறியுள்ளார் பிகே. அதன்படி தீபாவளிக்கு ரிலீஸ் ஆன அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறித்தும் அண்ணத்த படத்தின் ரிலீஸின் போது ரசிகர் ஒருவர் ஒருபாய்க்கு தோசை விற்றது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

 டிசம்பர் 15ஆம் தேதிக்கு பின்

டிசம்பர் 15ஆம் தேதிக்கு பின்


இதேபோல் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது என்பது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. இந்தியன் 2 படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்ஷனுக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையே வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு டிசம்பர் 15ஆம் தேதிக்கு பின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அன்புச்செல்வன் போஸ்டர்

அன்புச்செல்வன் போஸ்டர்

இதேபோல் கவுதம் மேனன் நடிக்கும் அன்புச்செல்வன் படத்தின் போஸ்டர் வெளியானது குறித்தும், பின்னர் அந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என்று கவுதம் மேனன் விளக்கம் அளித்தது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் அந்தப் படத்தில் ஏற்பட்ட பிரச்சனை என்ன என்பது குறித்தும் விளக்கியுள்ளார் பிகே.

சூர்யா படங்கள்

சூர்யா படங்கள்

இதேபோல் ஜெய் பீம் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் பின்னர் சூர்யா ரசிகர்கள் அப்படத்தை ஹோட்டலில் ரிலீஸ் செய்யப் போவதாக கூறியது குறித்தும் கூறியுள்ளார் பிகே. மேலும் சூர்யா, ஜோதிகா ஆகியோர் நடிக்கும் படங்கள் மற்றும் அவர்களின் தயாரிப்பில் உருவாகும் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படாதது குறித்தும் கூறியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X