பிக்பாஸ் சீசன் 5 எப்போது? தீவிர ஏற்பாட்டில் நிகழ்ச்சிக் குழு.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 5 எப்போது தொடங்கவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் சீசன் 4 கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக ஜனவரி மாதம் வரை இழுக்கப்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் ஐந்தையாவது உரிய நேரத்தில் தொடங்க பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு திட்டமிட்டது. இதற்கான பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டது பிக்பாஸ் டீம்.

தொகுப்பாளர் மாற்றம்

தொகுப்பாளர் மாற்றம்

அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் முதல் பங்கேற்க போகும் போட்டியாளர் வரை பலரிடமும் நிகழ்ச்சிக் குழு பேச்சு வார்த்தை நடத்தியது. கடந்த 4 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் தேர்தலில் பிசியாக இருந்ததால் பிக்பாஸ் சீசன் 5ஐ தொகுத்து வழங்க சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக கூறப்பட்டது.

பெரும் தொகை சம்பளம்

பெரும் தொகை சம்பளம்

ஆனால் பிக்பாஸ் சீசன் 5யும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கப்போகிறார் என அதிகாரப்பூர்வ தகவல் அண்மையில் வெளியானது. இதற்காக கடந்த சீசன்களை காட்டிலும் பெரும் தொகை அவருக்கு சம்பளமாக பேசப்பட்டதாகவும் கூறப்பட்டது.

நகுல் மறுப்பு

நகுல் மறுப்பு

இதேபோல் நடிகர் நகுலை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் தான் பிக்பாஸில் பங்கேற்க போவதில்லை என மறுத்துவிட்டார் நடிகர் நகுல்.

கனி, சுனிதாவிடம் பேச்சு

கனி, சுனிதாவிடம் பேச்சு

அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி பிரபலங்களான கனி மற்றும் சுனிதாவிடமும் பிக்பாஸ் டீம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. மேலும் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும் யூட்யூப் பிரபலமுமான இனியனிடமும் நிகழ்ச்சிக் குழு பேசி வருவதாக தகவல் வெளியானது.

உறுதிப்படுத்தப்படவில்லை

உறுதிப்படுத்தப்படவில்லை

என்ஜாய் எஞ்சாமி பாடல் பிரபலமான தெருக்குரல் அறிவு பிரபல ஆர்ஜேவும் பிளாக் ஷீப் யூட்யூப் சேனலின் நிறுவனருமான ஆர்ஜே வினோத்திடமும் நிகழ்ச்சிக் குழு பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இதனை உறுதிப்படுத்தவில்லை.

கொரோனா லாக்டவுன்

கொரோனா லாக்டவுன்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் உச்சத்தில் இருந்தது. இதனால் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா இரண்டாவது அலை குறைந்து வருகிறது.

மூன்றாவது அலைக்கு முன்பாக

மூன்றாவது அலைக்கு முன்பாக

இதனால் தமிழகத்தில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5க்கான பணிகள் மீண்டும் சூடு பிடித்துள்ளது. கொரோனா மூன்றாவது அலை தொடங்குவதற்கு முன்பாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்க நிகழ்ச்சிக் குழு முடிவு செய்துள்ளதாம்.

தடுப்பூசி வழங்க ஆலோசனை

தடுப்பூசி வழங்க ஆலோசனை

இதனால் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்க நிகழ்ச்சிக் குழு முடிவு செய்துள்ளது. இதற்காக போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி சம்பந்தப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X