'ஜிகர்தண்டா'வை அப்படியே வச்சிருந்தா 'ஜில்' போயிருமேப்பா...!!

By Mayura Akilan

ஜிகர்தண்டா படம் முடிவடைந்தும் ரிலீஸ் ஆவதற்குக் காரணம் சென்சார் போர்டு வைத்த செக்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

பீட்சாவை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் ஜிகர்தண்டா. தீயா வேலை செய்யனும் குமாரு''-க்கு பிறகு சித்தார்த் ஜிகர்தண்டா படத்தை அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.

காரணம், இந்த படத்தில் மதுரை மண்வாசனைக்கதையில் முதன்முறையாக அவர் ஆக்சன் கோதாவில் இறங்கியிருக்கிறார். லட்சுமிமேனன் ஜோடி என்பதால் ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

When is Jigarthanda releasing?

யு/ஏ கொடுத்த சென்சார்

படத்தை முடித்து சென்சார் போர்டுக்கு அனுப்பினால், ரத்தம் வழிந்தோடும் வன்முறைக் காட்சிகள் இருப்பதை காரணம் காட்டி யு/ஏ சான்றிதழ் கொடுத்து விட்டனர்.

விநியோகஸ்தர்கள் முரண்டு

இதையடுத்து அப்படத்தை அதிக தொகை கொடுத்து வாங்க முன்வந்த விநியோகஸ்தர்களோ, டிக்கெட் விலையில் 30 சதவிகிதம் அரசுக்கு சென்று விடும் என்பதால், ஏற்கனவே பேசிய தொகையில் இருந்து ஒரு கணிசமான தொகையை குறைப்பதாக சொல்கிறார்களாம்.

மறுக்கும் இயக்குநர்

இதனால், சென்சார்போர்டு சொல்லும் காட்சிகளை நீக்கினால் யு சான்றிதழ் கிடைக்கும். விநியோகஸ்தர்களும் பேசிய தொகையை தந்து விடுவார்கள். பிரச்னை முடிந்து விடும் என்று தயாரிப்பு தரப்பு கூறினாலும், டைரக்டர் மறுக்கிறாராம்.

அந்த காட்சிகளில்தான் கதையின் ஜீவனே இருக்கிறது. அதை நீக்கினால் படமே இல்லையே,. அப்புறம் எப்படி படம் ஓடும் என்று வாக்குவாதம் செய்கிறாராம்.

ரிலீஸ் தாமதமாகும்

இதன்காரணமாகத்தான் கடந்த 5 மாதங்களாக இதோ அதோ என்று ஜிகர்தண்டா திரைக்கு வருவது தாமதமாகிக்கொண்டு வருகிறதாம். அதனால், இதுவரை காவியத்தலைவன் பட வேலைகளில் பிசியாக இருந்த சித்தார்த், இப்போது இறங்கி வந்து இயக்குநர்-தயாரிப்பாளர் இருவரிடமும் சுமூகமாக பேசி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் வேலைகளில் இறங்கியிருக்கிறாராம்.

சீக்கிரம் கொடுத்துடுங்க

ஜிகர்தண்டாவை ஜில்லுன்னு சாப்பிட்டதான் நல்லா இருக்கும் இல்லைன்னா சூடாகி டேஸ்ட் மாறிடும். ரசிகர்களும் ஒத்துக்க மாட்டாங்க. இது எத்தனையோ படங்களுக்கு நடந்திருக்கு. இதை இயக்குநர் புரிந்து கொண்டால் சரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X