கார்த்தி – மித்ரன் இணையும் புதிய படம்...அப்டேட் வெளியிட்ட படக்குழு

சென்னை : இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கி புகழ்பெற்றவர் டைரக்டர் பி.எஸ்.மித்ரன். இவர் தற்போது கார்த்தியை இயக்க உள்ளார். மித்ரன் - கார்த்தி இணையும் புதிய படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்தது.

லேட்டஸ்ட் தகவலாக, ஏப்ரல் 26 ம் தேதி முதல் இந்த புதிய படத்தின் படப்பிடிப்புக்கள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

WHEN KARTHI’S FILM WITH PS MITHRAN STARTS ROLLING

விரைவில் இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவை ஜார்ஜ் சி வில்லியம்ஸ் மற்றும் எடிட்டிங்கை ரூபனும் கவனிக்க உள்ளனர்.

கார்த்தி நடித்த சுல்தான் படம் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் தான் சுல்தான் படத்தையும் இயக்கி இருந்தார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

சுல்தான் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக தயாராகி வரும் இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, த்ரிஷா உள்ளிட்ட பலர் பிரபலங்கள் நடிக்கின்றனர்.

தற்போது மித்ரன் இயக்கும் படத்துடன் சேர்த்து மேலும் சில படங்களில் நடிக்க கார்த்தி கமிட் ஆகி உள்ளார். இதனால் பிசியான நடிகராக கார்த்தி மாறி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X