நயன்தாராவின் நெற்றிக்கண் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது தெரியுமா..?
சென்னை : தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா.
ரஜினிகாந்துடன் மூன்றாவது முறையாக இணைந்து அண்ணாத்த மற்றும் விக்னேஷ் சிவனுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் நெற்றிக்கண் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் எப்போது ரிலீஸ் ஆக உள்ளது என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

நம்பர்-1 நாயகி
தமிழ் சினிமாவில் தற்போது நம்பர்-1 நாயகியாக உள்ள நடிகை நயன்தாராவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக வசூல் செய்து வருகிறது. தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தும் அது தற்பொழுது ஹீரோயின்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகியும் உள்ளது. அந்த வகையில் நயன்தாரா இப்பொழுது நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடந்து
சந்திரமுகி, தர்பார் ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் இதில் மற்றுமொரு ஹீரோயினியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு கொரோனா சூழலுக்கு மத்தியிலும் பல்வேறு கட்டங்களாக ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

காத்துவாக்குல ரெண்டு காதல்
நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர் இதன் படப்பிடிப்பு 50% முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

முதல் முறையாக
இந்த நிலையில் அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் நெற்றிக்கண் என்ற படத்தில் நயன்தாரா முதல் முறையாக பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது . மேலும் இந்த படம் பிளைன்ட் என்ற கொரியன் படத்தின் ரீமேக் எனவும் கூறப்படுகிறது.

இதுவும் கடந்து போகும்
தற்போது இறுதிகட்ட பணியில் உள்ள நெற்றிக்கண் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா சூழல் காரணமாக ஓடிடியில் வெளியாகிறது என சொல்லப்படுகிறது . இதில் நயன்தாராவுக்கு ஜோடியாக அஜ்மல் நடித்துள்ளார். ரவுடி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு க்ரிஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் ரசிகர்களுக்காக சூப்பரான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. நெற்றிக்கண் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் "இதுவும் கடந்து போகும்" பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதை இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். வெளியீட்டு தேதி மிக விரைவிலேயே அறிவிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











