நெருங்கி வரும் நெற்றிக்கண் ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது!?
சென்னை: அவள் படத்தின் இயக்குனரான மிலிந்த் ராவ் இயக்கியுள்ள படம் தான் நெற்றிக்கண்.
விக்னேஷ் சிவன் தயாரிப்பில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் நடித்துள்ளார். அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நெற்றிக்கண் படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார் & ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கொரியன் திரைப்படம்
2011ம் ஆண்டு வெளியான "ப்ளைண்ட்" என்ற கொரியன் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்கே நெற்றிக்கண் திரைப்படமாகும். இந்த திரைப்படம் கொரியாவில் பெரிய அளவில் வெற்றி பெற்று, நிறைய வசூலையும் குவித்தது.

கொரோனா தொற்று
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே 80 சதவீதம் முடிந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு ஒரே கட்டமாக படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

நல்ல வரவேற்பு
கடந்த ஆண்டு வெளியான டீசர், சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள் என அனைத்தும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படம் எப்போது வெளியாகும் என்பதில் தான் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் படம் OTT யில்
வெளியாகவுள்ளதாக தகவல்கள் வந்தன.

ஜூலை 2ம் வாரம்
இந்நிலையில் நெற்றிக்கண் படக்குழு படத்தை ஜூலை மாதம் 2ம் வாரத்தில் நேரடியாக ஹாட் ஸ்டாரில் வெளியிடவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் உறுதியளிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











