விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா.. தாறு மாறான அப்டேட்.. தயாராகும் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் விஜய்யின் நடிப்பில் அசுரவேகத்தில் தயாராகிக் கொண்டுள்ளது பீஸ்ட் திரைப்படம் இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் படத்தை இயக்கி வர முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது.

ஹைதராபாத்தை தொடர்ந்து இப்பொழுது சென்னையில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இப்படம் எப்போது ரிலீஸ் ஆகிறது என்பதை பற்றிய புதிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

உலக அளவில் வசூல் சாதனை

உலக அளவில் வசூல் சாதனை

கோலிவுட்டின் ஆல் டைம் வசூல் மன்னனாக இருந்து வரும் விஜய்யின் திரைப்படங்கள் ஒவ்வொரு முறை வெளியாகும் போதும் புதிய சாதனைகளை செய்து வருகிறது . இந்த வகையில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் முதல் முறையாக காலேஜ் புரபசர் ரோலில் நடித்து அசத்தி இருந்தார். தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளிலும் இப்படம் வெளியாகி சக்கை போடு போட்டது. 2021ல் வெளியாகி உலக அளவில் வசூல் சாதனையை படைத்த படங்களின் பட்டியலில் முதல் 50 இடங்களில் மாஸ்டர் படமும் இடம் பெற்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தது.

நெல்சன் திலீப்குமார்

நெல்சன் திலீப்குமார்

அடுத்ததாக முருகதாஸ் அல்லது அட்லியின் இயக்கத்தில் நடிப்பார் என செய்திகள் வலம் வந்த நிலையில் அதை எல்லாம் தாண்டி டாக்டர் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த இருப்பது உறுதி செய்யப்பட்டது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து இப்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கியுள்ளார். மருத்துவத் துறையில் சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் மெடிக்கல் ஸ்கேமிங்கை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் இதுவரை நடித்திராத வித்தியாசமான ரோலில் இப்படத்தில் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் திரையரங்குகளில் வெளியாக இருந்த டாக்டர் திரைப்படம் கொரோனா சூழல் காரணமாக நேரடியாக ஓ டி டியில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

க்ளாஸ் மாஸாக

க்ளாஸ் மாஸாக

நெல்சன் திலிப்குமர், விஜய் முதல் முறையாக இணையும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகையே ஆச்சரியப்படுத்தி இருக்க இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. விஜய் திரைப்படங்கள் என்றாலே க்ளாஸ் மாஸாக இருக்கும் அதே அம்சங்களுடன் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த சில புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின.கடந்த சில விஜய் படத்தில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை ,ஹீரோ கேரக்டருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து கதை உள்ளது என்று ஒரு பேச்சு நிலவியது . பீஸ்ட் படத்தின் போஸ்டரும் ,ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் அனைத்திலும் விஜய் மட்டுமே அதிகளவில் தெரிவதால் இந்த படத்திலும் ஹீரோக்கு மட்டும் அதிக முக்கியதுவம் கொண்டுள்ள படமாக இருக்குமோ என்று ஒரு கேள்வி பலரிடத்தில் நிலவுகின்றது.

புட்ட பொம்மா நாயகி

புட்ட பொம்மா நாயகி

பீஸ்ட் இரண்டாம் கட்ட படப்பிடிப்பையும் ஹைதராபாத்தில் நடத்தி முடித்து விட்டு அடுத்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகின்றனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்ற சஸ்பென்ஸ் நீண்டுகொண்டே போக ஒரே ஒரு பாடலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வலைத்துப் போட்ட புட்ட பொம்மா நாயகி பூஜா ஹெக்டே இதில் கதாநாயகியாக நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய்க்கும் பூஜாவுக்கும் இடையேயான காட்சிகள் இப்போது சென்னையில் எடுக்கப்பட்டு வருகிறது.

ஷைன் டாம் சாக்கோ

ஷைன் டாம் சாக்கோ

நடிகை பூஜா ஹெக்டே முதன்முதலில் தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகம் செய்யப்பட்டார். அதன்பிறகு தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் தெலுங்கு மற்றும் இந்தியில் கவனம் செலுத்தி வந்தவருக்கு அடுத்தடுத்த படங்கள் ஹிட்டாகி இப்பொழுது பாலிவுட்டிலும், டோலிவுட்டிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இந்த நிலையில் மீண்டும் பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் இதில் விடிவி கணேஷ்,யோகி பாபு, விஜய் டிவி புகழ், அபர்ணா தாஸ் ஆகியோர் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இணைந்துள்ளார். வெயிட்டான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.படத்தில் அணைத்து நடிகர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

2022 சம்மரில் வெளியிட

2022 சம்மரில் வெளியிட

இவ்வாறு பல்வேறு அம்சங்களுடன் தயாராகிவரும் பீஸ்ட் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் மிக விரைவிலேயே வெளியாக உள்ளது. படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களிலேயே பேக்கப் செய்யப்பட்டாலும் அதன்பிறகு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடிக்க குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது எடுத்துக் கொள்ளும் எனவே பீஸ்ட் 2022 சம்மருக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த செய்தியை கேட்ட விஜய் ரசிகர்கள் குஷியில் பீஸ்ட் படத்தை திரையில் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X