‘கோல்டன் ஸ்பேரோ, என் நெஞ்சுல ஏரோ’ நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.. ரிலீஸ் எப்போ!

சென்னை: தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இன்றைய இளம் தலைமுறையினர் கொண்டாடும் வகையில் காதலை மையமாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இருந்த முதல் சிங்கிள் பாடல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு சிறப்பான ஆண்டு என்றே சொல்லலாம். ஏன் என்றால், அந்த ஆண்டில் தான் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் நடித்திருந்தார். அந்த படம் வெளியாகி பல விமர்சனத்தை சந்தித்த போதும், வணிக ரீதியில் வெற்றி பெற்ற திரைப்படமாகவே இருந்தது. அந்த படத்தைத் தொடர்ந்து, காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதையை கண்டேன், சுள்ளான், புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என அடுத்தடுத்த படத்தில் நடித்த போதும், இதெல்லாம் ஒரு மூஞ்சா, இவன் நடிச்சா யார் பார்ப்பது என பல விமர்சனங்கள் வந்தன. அதை வாங்கிக் கொள்ளாமல், திரையில் உழைப்பை மட்டுமே கொடுத்து இன்று அனைவரும் கொண்டாடும் ஒரு நட்சத்திர நடிகராக மாறி இருக்கிறார் தனுஷ்

nilavukku en mel ennadi kobam dhanush song

நடிகர் தனுஷ்: நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் என அடுத்தடுத்து தனது திறமையை வளர்த்துக்கொண்ட தனுஷை ரசிகர் வியந்துப் பார்த்து வருகின்றனர். படத்திற்கு படம் நடிப்பை மெறுகேற்றி நடிப்பின் அசுரனாக கலக்கி வரும் தனுஷ், இயக்குநராகவும் வெற்றி பெற்றுள்ளார். நடிகரான தனுஷ், 'பவர் பாண்டி' படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். அந்த படத்தில் ராஜ்கிரண், ரேவதி, டிடி,பிரசன்னா என பலர் நடித்திருந்தனர். இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது.

ராயன் படத்தில்: பவர் பாண்டி படத்தை தொடர்ந்து, தனுஷின் 50வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் தனுஷ், செல்வராகவன், சந்தீப் கிஷன், எஸ்.ஜே. சூர்யா, காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் மொட்டை தலையுடன் கதாநாயகியே இல்லாமல், தங்கைக்காக எது வேண்டுமானாலும் செய்யும் ஒரு பாசக்கார அண்ணனாக நடித்திருந்தார் தனுஷ். 'ராயன்' படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாக விமர்சனம் வந்தபோதும், ஏ.ஆர்.ரஹ்மான் தரமான இசையை கொடுத்து படத்திற்கு பலமாக இருந்து கல்லாவை நிரப்பு விட்டார்.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் மூன்றாவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'. இப்படத்தில், தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷின், வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

எப்போது ரிலீஸ்: இப்படத்தில் இருந்து கடந்த 30ந் தேதி முதல் பாடல் வெளியானது.ஜி வி பிரகாஷ் இசையில், சுபலாஷினி, ஜி வி பிரகாஷ் , தனுஷ், அறிவு இணைந்து பாடியுள்ளனர். இன்றைய காலத்து இளசுகளுக்கு பிடித்த வகையில், ரேப் கலந்த ஃபோக் பாடலாக உருவாகி உள்ள பாடலில், தமிழும் ஆங்கிலமும் சேர்ந்து வருகிறது. "கோல்டன் ஸ்பேரோ, என் நெஞ்சுல ஏரோ" என தொடங்கும் பாடலை தற்போது பேன்ஸ் டிரெண்டாக்கி வருகின்றனர். இத்திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X