ராக்கி எப்போது ரிலிஸ்!? விக்னேஷ் சிவன் அளித்த பதில்!
சென்னை: நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் விநியோகத்தில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள படம் 'ராக்கி'.
இந்த படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். டர்புக்கா சிவா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ரிலிஸ் தேதி குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு இப்போது பதில் கிடைத்துள்ளது.

எதிர்பார்ப்பில் படங்கள்
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நெற்றிக்கண், கூழாங்கல் & விநியோகித்துல ராக்கி ஆகிய படங்கள் ரிலீசுக்கு காத்துள்ளன. கூழாங்கல் Film Festival லில் Screening செய்யப்பட்டு விருதுகளை வென்று வருகிறது. ரௌடி பிக்சர்ஸ் சார்பாக அடுத்தடுத்து வெளிவரவுள்ள படங்கள் மீது எதிர்பார்ப்பு உள்ளது.

வசந்த் ரவி - பாரதிராஜா
இதில் குறிப்பாக ராக்கி படத்தின் மீது எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்த படத்தினை முன்னரே இயக்கி முடித்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் செல்வராகவனை வைத்து அடுத்த படத்தையே இயக்க தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் ராக்கி நிலுவையில் உள்ளது வருத்ததிற்குரிய விஷயம்.

OTT வெளியீடு
இந்நிலையில் தமிழில் ராக்கி, நெற்றிக்கண், வாழ், கசட தபற, கடைசி விவசாயி, நரகாசூரன் ஆகிய படங்கள் Sony Liv தமிழில் நேரடியாக வெளியாகவுள்ளது என தகவல்கள் வந்தன. அதிலிருந்து ராக்கி வெளியேறி உள்ளது உறுதியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் உறுதி
விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராக்கி ரிலிஸ் குறித்த மீம் ஒன்றிற்கு பதில் கூறியுள்ளார். அதில் தற்போது உள்ள சூழல் இயல்பு நிலைக்கு திரும்பி திரையரங்கங்கள் திறந்த உடன் ராக்கி வெளியாகும் என உறுதியளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











